Published:Updated:

``ராமர் இந்துக்களுக்குரியவர் மட்டுமல்ல, அனைவருக்குமானவர்!" - ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

``தேர்தல் நேரத்தில், இந்துக்கள் ஆபத்திலிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதற்கு இரையாகிவிடவேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்." - ஃபரூக் அப்துல்லா

``ராமர் இந்துக்களுக்குரியவர் மட்டுமல்ல, அனைவருக்குமானவர்!" - ஃபரூக் அப்துல்லா

``தேர்தல் நேரத்தில், இந்துக்கள் ஆபத்திலிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதற்கு இரையாகிவிடவேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்." - ஃபரூக் அப்துல்லா

Published:Updated:
ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரை 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததையடுத்து இன்னும் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சி அமையவில்லை. அதற்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, கட்சியில் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் ஃபரூக் அப்துல்லா, தேர்தல் நேரத்தில் இந்துக்கள் ஆபத்திலிருப்பதாகச் சொல்வார்கள் என்றும் அதற்கு இரையாகவேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

அக்னூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஃபரூக் அப்துல்லா, ``இங்கு எந்தவொரு மதமும் கெட்டது அல்ல. அதன் மனிதர்கள்தான் கெட்டவர்கள், மதம் அல்ல. தேர்தல் நேரத்தில், இந்துக்கள் ஆபத்திலிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதற்கு இரையாகிவிடவேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் 70 முதல் 80 சதவிகிதம் இந்துக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆபத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா. ராமர் இந்துக்களுக்குரியவர் மட்டுமல்ல அனைவருக்குமானவர்" என்று கூறினார்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

மேலும் தேசிய மாநாடு கட்சி பாகிஸ்தான் பக்கம் நிற்பதாக எழுந்த பேச்சுகளுக்கு, ``தேசிய மாநாடு கட்சி ஒருபோதும் பாகிஸ்தானின் பக்கம் நிற்கவில்லை. ஜின்னா என் தந்தையைச் சந்திக்க வந்திருந்தார், ஆனால் நாங்கள் அவருடன் கைகோர்ப்பதை மறுத்தோம். அதேபோல் சரியான நேரத்தில் (தேர்தல் நேரத்தில்) எங்களை நீங்கள் ஆதரித்தால், ஜம்மு-காஷ்மீர், லடாக் மீண்டும் ஒன்றாக இருக்கும் காலம் தொலைவில் ஒன்றும் இல்லை" என ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.