Published:Updated:

``வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் காஷ்மீரின் முன்னேற்றம் தொடங்குகிறது!'' - அமித் ஷா

காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் வந்தேபாரத் ரயில் மதியம் 2 மணிக்கு கத்ராவைச் சென்றடையும்.

Vande Bharat Express
Vande Bharat Express

டெல்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு வந்தேபாரத் எக்பிரஸ் ரயிலை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அக்டோபர் 5-ம் தேதி முதல் வந்தேபாரத் ரயில் இயங்கத் தொடங்கும். ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Vande Bharat Express
Vande Bharat Express

இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி ரயில் நிலையம் கத்ரா ஆகும். டெல்லியிலிருந்து கத்ரா செல்ல வழக்கமாக 12 மணி நேரம் ஆகும். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், பயண நேரத்தை 8 மணி நேரத்தில் கடந்துவிடும்.

ஜம்மு|காஷ்மீர்|லடாக்: புவியியல் முதல் பொருளாதாரம் வரை அறியவேண்டிய வேறுபாடுகள்!

ரயிலின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''அடுத்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கும். இங்கே ஆன்மிகச் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியடையும். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசின் நவராத்திரி பரிசாக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வழங்கியிருக்கிறோம்'' என்றார்.

பிரதமர் மோடி தன் ட்வீட்டில், ''ஜம்மு - காஷ்மீரில் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு வந்தேபாரத் ரயில் நவராத்திரி பரிசு. இது, கத்ரா டெல்லியுடன் இணைக்கப்படுவது அந்த நகரத்தின் முன்னேற்றத்துக்கு உதவும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

amit shah
amit shah

வந்தேபாரத் ரயில், காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கத்ரா சென்றடையும். அம்பாலா கன்ட், லூதியானா மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும். பின்னர், மதியம் 3 மணிக்கு கத்ராவிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணி டெல்லி வந்தடையும். ரயில் கட்டணமாகக் குறைந்தது ரூ. 1,630-ம் அதிகபட்சமாக 3,015-ம் வசூலிக்கப்படும்.