Published:Updated:

JNU: பிபிசி ஆவணப்படம் திரையிடல்; மின்சாரம் துண்டிப்பு - கல்வீசித் தாக்குதல் என மாணவர்கள் புகார்

ஆர்பாட்டத்தில் மாணவர்கள் ( ட்விட்டர் )

ஆவணப்படம் பார்க்க முயன்ற ஜே.என்.யு மாணவர்கள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார்

JNU: பிபிசி ஆவணப்படம் திரையிடல்; மின்சாரம் துண்டிப்பு - கல்வீசித் தாக்குதல் என மாணவர்கள் புகார்

ஆவணப்படம் பார்க்க முயன்ற ஜே.என்.யு மாணவர்கள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார்

Published:Updated:
ஆர்பாட்டத்தில் மாணவர்கள் ( ட்விட்டர் )

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம், `India: The Modi Question’ என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

jnu
jnu
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய பிபிசி ஆவணப்படத்தைத் திரையிட முடிவுசெய்திருக்கின்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், மாணவர்கள் தங்களின் மொபைல், லேப்டாப் மூலம் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். அப்போது இருட்டிலிருந்து சிலர் திட்டமிட்டு கற்கலால் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்துப் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தங்கள் மீது கற்களை வீசியதற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும், மாணவர்கள் பேரணியாகச் சென்று வசந்த் கஞ்சிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆவணப்படம் பார்க்கும் jnu மாணவர்கள்
ஆவணப்படம் பார்க்கும் jnu மாணவர்கள்
ட்விட்டர்

இது தொடர்பாக பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷி கோஷ்," மாணவர் சங்கம் புகார் அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்காக நிற்கும் நாடு என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், ஒவ்வொரு விதமான கருத்துகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

இந்த நிலைப்பாட்டைத் தடுத்து, மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதன் மூலம் எங்களைத் துண்டாட நினைக்கிறார்கள். எங்களின் எதிர்ப்பை முறியடிக்க, ஜே.என்.யு-வின் எண்ணத்தை, கருத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், அது நடக்கப்போவதில்லை. ஆவணப்படம் திரையிட முடிவு செய்யப்பட்ட வளாகம் அதன் தொடக்கத்திலிருந்தே ஜே.என்.யு மாணவர்களுக்கானது. அது எப்போதும் போராட்டம், எதிர்ப்புக்காக நிற்கும். எனவே, நாங்கள் ஒன்றாக அந்த ஆவணப்படத்தைப் பார்ப்போம், இது ஒரு பொது எதிர்ப்பாக இருக்கும். நாங்கள் எங்கள் ஜனநாயகத்தில் அக்கறை கொள்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை
ட்விட்டர்

இது தொடர்பாக பேசிய ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்," மின்சார துண்டிப்பால் ஆசிரியர் குடியிருப்புகள், பிற வசதிகள் கூட மின்சாரமின்றி இருக்கின்றன. இந்தப் பிரச்னையைப் பொறியியல் பிரிவு விசாரித்துவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.