Published:Updated:

`சீமான், தனது குற்றத்தை மறைக்கவே, ராகவனை ஆதரிக்கிறாரோ?!’ - ஜோதிமணி கேள்வி

ஜோதிமணி எம்.பி., சீமான், ராகவன்
ஜோதிமணி எம்.பி., சீமான், ராகவன்

``சீமான் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.’’

தமிழக பாஜக மாநில முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சையைத் தொடர்ந்து அதை மறுத்த கே.டி.ராகவன், தனது கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததோடு, சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், கே.டி.ராகவனின் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.

ராகவன்  - சீமான்
ராகவன் - சீமான்

சீமான் பேசுகையில், ``இதில் எது அநாகரிகம் என்று நீங்களே பாருங்கள். அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கே தெரியாமல் அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவைவைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூகக் குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத்தான் முதலில் கைதுசெய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பதுபோல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார். சீமானின் பதில், இந்த விவகாரத்தை மேலும் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது.

இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும், கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஜோதிமணி, ``பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலைக் கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க ராகவனின் பாலியல் குற்றத்தை, சுரண்டலைச் சிறிதும் வெட்கமில்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது.

சீமான் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பாஜக-விடமிருந்து மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆபாசமான, அருவருக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமும் பெண்களும் தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார்?; வீடியோ வெளியிட்டவரைத்தான் கைது செய்யணும்’ -சீமான்

இவர்களெல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றித் துளிக்கூட கவலைப்படாதவர்கள். பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு ஆளாவதை ஆதரிப்பவர்கள்.

காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா... பாலியல் குற்றவாளிகளெல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ, அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை சீமான் நினைவில்கொள்ள வேண்டும். அந்தப் போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பைச் செலுத்திவருகிறார்கள்.

பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி பொதுவாழ்வுக்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை. அந்தக் கடமையைத்தான் தமிழ்ச் சமூகம் சரிவரச் செய்துவருகிறது.

பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது.

சீமான் மீதும் கடந்தகாலத்தில் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான், ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும், சீமான் பாஜகவின் B Team-தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சீமான்
சீமான்

எப்படியிருந்தாலும் சீமானின் இந்தச் செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி.ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம், குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்துகொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யும் பெருந்தொண்டு” என்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு