Published:Updated:

``நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!"... திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி - நடந்தது என்ன?

ஆவேசமாக வெளியேறும் ஜோதிமணி

தி.மு.க-வினர் பேச்சுவார்த்தையின்போது ஒருமையில் பேசி, தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாகக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, தி.மு.க-வினரைப் பார்த்து, 'உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை. எனக்கும் திருப்பிப் பேசத் தெரியும்' என ஆவேசமாகப் பேசியபடி வெளியேறினார்.

``நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!"... திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி - நடந்தது என்ன?

தி.மு.க-வினர் பேச்சுவார்த்தையின்போது ஒருமையில் பேசி, தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாகக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, தி.மு.க-வினரைப் பார்த்து, 'உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை. எனக்கும் திருப்பிப் பேசத் தெரியும்' என ஆவேசமாகப் பேசியபடி வெளியேறினார்.

Published:Updated:
ஆவேசமாக வெளியேறும் ஜோதிமணி

கரூர் தி.மு.க கட்சி அலுவலகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தன்னை தி.மு.க-வினர் ஒருமையில் பேசி வெளியேற்றியதாக, காங்கிரஸ் கரூர் எம்.பி ஜோதிமணி அதிரடியாகக் குற்றம்சாட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில் செந்தில் பாலாஜி
வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில் செந்தில் பாலாஜி

'என்ன நடந்தது?' என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.

``இதுவரை நகராட்சியாக இருந்தவந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சி மேயர், மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள், கரூர் மாநகராட்சியைக் கைப்பற்ற, தகுந்த வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணிக் கட்சியினருடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் தி.மு.க மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டணிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி, ஒரு பட்டியலைத் தயார் செய்து வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தனது ஆதரவாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி தனிப் பட்டியல் கொடுத்தாராம்.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, 50 சதவிகிதப் பட்டியலுக்கு மட்டும் ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒன்பது வார்டுகளை ஜோதிமணி கேட்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து, 'நாங்கள் கொடுத்த பட்டியல்படி வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறி ஜோதிமணி வலியுறுத்தியதால், அங்கிருந்த தி.மு.க-வினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேச்சுவார்த்தையின் போது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், எம்.பி ஜோதிமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் கோபமான தி.மு.க-வினர், ஜோதிமணியை வெளியேறும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க அலுவலகத்தைவிட்டு திடீரென வெளியேறினர்.

தி.மு.க-வினரிடம் வாக்குவாதம் செய்யும் ஜோதிமணி
தி.மு.க-வினரிடம் வாக்குவாதம் செய்யும் ஜோதிமணி

அப்போது, தி.மு.க-வினர் பேச்சுவார்த்தையின்போது ஒருமையில் பேசி, தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாகக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, ஆவேசமாக வெளியே வந்தார். அவரை காங்கிரஸ் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி, கையைப் பிடித்து அழைத்துப் போய் காரில் ஏற்றி அனுப்பிவைத்தார். அப்போது ஜோதிமணி, தி.மு.க-வினரைப் பார்த்து, `உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை. ஒருமையில் எனக்கும் திருப்பி பேசத் தெரியும்' என ஆவேசமாகப் பேசியபடி வெளியேறினார்" என்றார்கள்.

தி.மு.க பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணி வெளியேறிய சம்பவம் இப்படிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ``மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது சுமுகமாகப் பேசித் தீர்க்கப்படும்" என தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணியிடம் பேச முயன்றோம். இருவரும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய சிலர்,

"கடந்த எம்.பி தேர்தல், அதன் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தல் வரை ஜோதிமணியும் செந்தில் பாலாஜியும் ஒற்றுமையாக இருந்து, பரஸ்பரம் ஒருவர் வெற்றிக்கு மற்றவர் பாடுப்பட்டனர். ஆனால், அதன் பிறகு கரூர் தொகுதியில் கட்டப்பட்ட ஆறு மேம்பாலங்களைக் கொண்டு வந்தது யார் என்கிற போட்டி, இன்னும் சில விஷயங்களில் இருவருக்கும் இடையில் முட்டிக்கொண்டது. அது ஈகோவாக மாறித் தொடர்ந்தது. இப்போது, அவர்களுக்கு இடையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த புகைச்சல், இப்போது வெடித்திருக்கிறது. இவர்களின் இந்தச் சண்டை, அ.தி.மு.க-வினரை மகிழ்ச்சியில் தள்ளியிருக்கிறது" என்றார்கள்.