Published:Updated:

`3 செங்கல்லை வைத்து, 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள்' - மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜோதிமணி

`மத்திய அரசு நினைத்தால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கச் செய்து தமிழகத்துக்குக் கிடைத்த அநீதியின் தவற்றைத் திருத்திக்கொள்ள முடியும்” - ஜோதிமணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`நீட் தேர்வு நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நீட் அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்தும் மத்திய அரசாங்கத்தால் நீட் தேர்வு திணிக்கப்படுகிறது" என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்
மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள்; இலவச  ஆட்டோ ஏற்பாடு செய்த ஆட்சியர்! - கரூர் நெகிழ்ச்சி

கரூரில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62,000 வீதம் ரூ.3.1 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் எ.ம்பி ஜோதிமணி, ``தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்துவருவது துயரமும் வேதனையும் அளிப்பதாக இருக்கிறது. மாணவர்கள் தைரியமாக இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது. நீட் தேர்வு தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கான முக்கியப் பிரச்னை. அதைத் தீர்க்கவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை. இந்தப் போராட்டத்தில் நிச்சயம் உங்கள் பிரச்னைக்கு நாங்கள் துணை நிற்போம். நீட் தேர்வு நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து போராடிவருகிறோம். நிச்சயமாக நீட் அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால், தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்தும், மத்திய அரசாங்கத்தால் நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு சட்டசபையில் தீர்மானத்தை நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கெனவே, 10 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க அரசும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. ஆனால், தற்போதுள்ள தி.மு.க அரசு நீதிபதி தலைமையில் குழு அமைத்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பின்னர் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. மத்திய அரசு நினைத்தால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கச் செய்து தமிழகத்துக்கு கிடைத்த அநீதியின் தவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கு ஒன்றிய பாஜக அரசு ஒரு புரிதல் இல்லாமல் இருக்கிறது. தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. வேறு மாநிலங்களில் குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில்கூட மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இல்லை. எனவே, அந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் உள்ளே நுழைந்து படித்து பயன் பெறுவதற்காக நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஆதரிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் உழைப்பில் தமிழக மண்ணில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உரிமையிருக்கிறது. அந்த உரிமையைப் பெற்றுத் தருவதற்கு ஒன்று சேர்ந்து போர்க்குரல் எழுப்புவோம்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

மாறாக, மரண ஓலங்கள் ஒலிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். நிச்சயம் தமிழக மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். அதேபோல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று மூன்று செங்கற்களை மட்டும் வைத்துவிட்டு, மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள். இதேபோல தான், மற்ற மாநிலங்களில் மோசமான ஆட்சியை பாஜக கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு நினைத்தால், மற்ற மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரியை தொடங்க முடியும். நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், அதை மேற்கொள்ளாமல் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதற்காக நீட் தேர்வை திணித்துவருகிறது. அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு