Published:Updated:

``சட்டத்தின் பார்வையில் இது குற்றமா?" - பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

சித்திக் கப்பன்

கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை, உத்தரப்பிரதேச போலீஸார் கைதுசெய்தனர்.

``சட்டத்தின் பார்வையில் இது குற்றமா?" - பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை, உத்தரப்பிரதேச போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
சித்திக் கப்பன்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள, வெங்கரா என்ற ஊரைச் சேர்ந்தவர் சித்திக் கப்பன். பத்திரிகையாளரான இவர், கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் பட்டியலினப் பெண் ஒருவர் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை, உத்தரப்பிரதேச போலீஸார் கைதுசெய்தனர். அவருடன் மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அந்த மூன்று பேர் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் சித்திக் கப்பனுக்குத் தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம்சாட்டி அவரை மதுரா சிறையில் அடைத்தனர். அவர்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) பாய்ந்தது. சித்திக் கப்பன் குற்றமற்றவர் என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேரளா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கோரியது.

ஹத்ராஸ் கொடூரம்!
ஹத்ராஸ் கொடூரம்!

இந்த நிலையில், சித்திக் கப்பனுக்கு உடல்நலமில்லாமல்போனது. அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவந்த அவரின் மனைவி இந்த விவகாரம் குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``மருத்துவமனையில் என் கணவர் ஒரு மனிதராகவே நடத்தப்படவில்லை. ஒரு விலங்கைப்போல நடத்துகிறார்கள். கட்டிலுடன் அவரை ஒரு இரும்புச் சங்கிலியால் பிணைத்துவைத்துள்ளனர். அவரால் சாப்பிட முடியவில்லை... கழிப்பறைக்குச் செல்ல முடியவில்லை. அவரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் குடும்பத்தினரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆறு மாதங்களாகக் கிடப்பில் இருக்கிறது என்பதையும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம்
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம்

ஜாமீன் வழங்க வேண்டும் என்ற சித்திக் கப்பனின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தனது ஜாமீன் மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சித்திக் கப்பன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதாவது, கப்பன் ஆறு வாரங்கள் டெல்லியில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிட்டது. ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவர் கேரளாவில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லலாம் எனவும், அப்போது அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

மேலும், சித்திக் கப்பன் ஜாமீனில் வெளியே செல்லும் முன்பு பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய எவருடனும் சித்திக் தொடர்புகொள்வதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட பி.எம்.எல்.ஏ வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றம் செல்லவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

``சித்திக் கப்பன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உ.பி காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்காக பொதுக் குரல் எழுப்ப முயன்றது சட்டத்தின் பார்வையில் குற்றமா?” எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.