Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்; 4 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்தார் ஜே.பி.நட்டா!

ஜே.பி நட்டா

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது குறித்து விசாரிக்க நான்கு பேர்கொண்ட குழுவை ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்; 4 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்தார் ஜே.பி.நட்டா!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது குறித்து விசாரிக்க நான்கு பேர்கொண்ட குழுவை ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.

Published:Updated:
ஜே.பி நட்டா

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரிக்க நான்கு பேர்கொண்ட குழுவை ஜே.பி.நட்டா அமைத்திருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி, விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாணவி பேசிய பல்வேறு வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிவருகின்றம. இந்த விவகாரத்தில் கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாகக் கூறி பா.ஜ.க., இந்து முன்னணியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அறிக்கை
அறிக்கை

இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க நான்கு பேர்கொண்ட குழுவை ஜே.பி.நட்டா அமைத்திருக்கிறார். நான்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழு நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விவரங்களைச் சேகரித்து, அதன் விவரங்களை அறிக்கையாக வழங்க வேண்டும் என பா.ஜ.க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க எம்.பி சந்தியா ராவ், கட்சித் தலைவர்கள் விஜயசாந்தி, சித்ரா வாக், கீதா விவேகானந்தா ஆகியோர் குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism