Published:Updated:

``சம்ஸ்கிருதம் நம்மை இருளிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லும் வழி..!" - ஜே.பி.நட்டா

ஜேபி நட்டா

``சம்ஸ்கிருதம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். நமது கலாச்சாரத்தை காக்க பாடுபடுபவர்களுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கும்’’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

``சம்ஸ்கிருதம் நம்மை இருளிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லும் வழி..!" - ஜே.பி.நட்டா

``சம்ஸ்கிருதம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். நமது கலாச்சாரத்தை காக்க பாடுபடுபவர்களுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கும்’’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஜேபி நட்டா

`ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது அண்மையில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் மக்களிடம் திணிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அமித் ஷா
அமித் ஷா

இந்த நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா டெல்லி சம்ஸ்கிருத விழா ஒன்றில் நேற்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``சம்ஸ்கிருத மொழி என்பதற்கு பொருள் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிப்பது என்பதாகும். சம்ஸ்கிருதத்தில் அறிவியல், கணிதம் மற்றும் தத்துவத்தின் வேர்கள் உள்ளன. இது ஒரு மொழி மட்டுமல்ல, சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களில் முன்னேற்றத்தை அடைவதற்கான ஒரு வழியாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

சம்ஸ்கிருதம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம். நமது கலாசாரத்தை காக்க பாடுபடுபவர்களுக்கு பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும். மோடி தலைமையிலான மத்திய அரசு சம்ஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எங்கெல்லாம் சம்ஸ்கிருதம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பண்பட்ட சமுதாயம் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தை வளர்க்க தற்போதைய காலகட்டமே சிறந்தது’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism