Published:Updated:

ரஜினி - கமல் அரசியல் ரூட்... முன்பே கணித்த ஜூனியர் விகடன்!

ஜூனியர் விகடன் அட்டைப்படம்
ஜூனியர் விகடன் அட்டைப்படம்

நவம்பர் 6-ம் தேதி ஜூனியர் விகடன் இதழில், 'பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!“ என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி வெளியானது. அந்தக் கட்டுரையின் முதல் பத்தியே இப்படித்தான் ஆரம்பித்தது.

ஒடிசா முதல்வரின் கையால் விருதுபெற்று சென்னை விமான நிலையத்தில் இறங்கிய கமல், “தேவைப்பட்டால் நானும் ரஜினும் இணைந்து செயல்படுவோம்” என்று சொல்கிறார். அதே விமான நிலையத்தில், கோவாவில் நடைபெறும் விழாவில் தனக்கு வழங்கப்படும் விருதை வாங்க பயணப்பட்ட ரஜினியும், “தேவைப்பட்டால் நானும் கமலும் இணைந்து செயல்படுவோம்” என்று அறிவிக்கிறார். அரசியல் இயக்கம் கண்டவரும், அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளவரும் சொன்ன ஒரே டயலாக் தான் தமிழக மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

ரஜினி -கமல்
ரஜினி -கமல்

கமல், ரஜினி அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என்கிற இந்த விவாதத்திற்கு, ஜூனியர் விகடனில் வெளியான கவர்ஸ்டோரியும் ஒரு காரணம். நவம்பர் 6-ம் தேதி ஜூனியர் விகடன் இதழில், 'பி.ஜே.பி-யின் ‘விருது’ தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்!“ என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி வெளியானது. அந்தக் கட்டுரையின் முதல் பத்தியே இப்படித்தான் ஆரம்பித்தது.

நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரே மாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?’’

“அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் பேசி முடிவுசெய்ய வேண்டும்.”

- ஆனந்த விகடன் பிரத்யேகமாக நடத்திவரும் ‘பிரஸ் மீட்டில்’ கேட்கப்பட்ட கேள்விக்கு, கமல் தந்த பதில் இது என்று ஆரம்பித்த அந்தக் கட்டுரையில், கமல்-ரஜினி இடையே நடந்துவரும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக அலசியிருந்தோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் நின்ற கமல், ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். ரஜினி, வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கத் தயாராகிவருகிறார். இருவரின் சித்தாந்தமும் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் இணைந்தால் மிகப்பெரிய வாக்கு வங்கியை உருவாக்க முடியும். தமிழகத்தில் ஐம்பதாண்டுகள் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான ஒரு ஆட்சியை இருவரும் உருவாக்க விரும்புவதையும், நல்லாட்சி என்கிற கொள்கையில் இருவரும் ஒருமித்த கருத்தோடு இருப்பதையும் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

ஜீனியர் விகடன் அட்டைப்படம்
ஜீனியர் விகடன் அட்டைப்படம்

பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு, ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அவர்கள் பக்கம் இழுக்க முயல்கிறது. அதற்கு ரஜினி வாய்ப்புக்கொடுக்க மாட்டார் என்று குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னதுபோலவே, “காவிக்குள் நானும் சிக்க மாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார்” என்று அதிரடியாக அறிவித்தார் ரஜினி. இதுதான் கமல் தரப்பை மிகவும் உற்சாகப்படுத்தியது. பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினி இல்லையென்றால், அவர் கண்டிப்பாக நம்முடன் கைகோக்க தயங்க மாட்டார் என்று கமல் உறுதியாக நம்பினார். பி.ஜே.பி -யுடன் இணைந்து தேர்தலைச் சந்திதால், அது உங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திவிடும் என்று கமலே ரஜினியிடம் சொல்லியுள்ளார். ரஜினியும் அந்தக் கருத்தை ஆமோதித்துள்ளார்.

`ஈ.பி.எஸ் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.. ஆனால், அற்புதம் நடந்தது.. நாளை..!’- கமல் விழாவில் ரஜினி

“கமல் கட்சிக்கு, நகரங்களில் இருக்குமளவுக்கு கிராமங்களில் வாக்குவங்கி இல்லை. அதனால், தனித்துக் களம் இறங்குவதைவிட ரஜினியுடன் கைகோத்து இறங்குவது புத்திசாலித்தனம் என முடிவுசெய்த பிறகே, அரசியல் மாற்றத்துக்கான மேடையாக, தனக்கான பாராட்டு விழா மேடையை கமல் மாற்ற முடிவுசெய்துள்ளார். முதல்வர் பதவியில்கூட இருவருக்குமிடையே முரண்பாடுகள் வராது. தேவைப்பட்டால், ரஜினியை முன்னிலைப்படுத்தி பின்னால் நிற்கக்கூட தயங்க மாட்டார் கமல்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

கமல், ரஜினி
கமல், ரஜினி

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 17-ம் தேதி 'கமல் 60' நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்கிற விறுவிறுப்பு அனைவரிடமும் எழுந்தது. ஆனால் ரஜினி தரப்பில், கமலுக்கு ஆதரவாக நேரடியாக எந்தக் கருத்தும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனால், “எடப்பாடி ஆட்சியின் அதிசயம்... நாளையும் அதிசயம் நடக்கும்“என்று மட்டும் சொல்லியிருந்தார். ரஜினி சொன்ன நாளைய அதிசம் என்பது எடப்பாடி ஆட்சி எதிர்காலத்திலும் தொடரும் என்பதை குறித்துதான் என்று அ.தி.மு.க தரப்பு ஸ்கோர் செய்தது.

இந்த நிலையில்தான், இனியும் தங்கள் கருத்துகளை நேரடியாகச் சொல்லாமல் இருக்கக்கூடாது என்று முடிவுசெய்த கமல், “தேவைப்பட்டால் ரஜினியும் நானும் இணைந்து செயல்படுவோம்” என்ற கருத்தை நேரடியாகச் சொன்னார். கமலின் கருத்து குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்” என்று அவரும் பதில் அளித்தார். இதன்மூலம் இரண்டு விஷயங்கள் உறுதியாகியுள்ளன. ஒன்று, “ரஜினி அரசியல் இயக்கம் ஆரம்பிப்பது உறுதி. இரண்டாவது, பி.ஜே.பி அ.தி.மு.க வலைக்குள் ரஜினி செல்வதற்கு வாய்ப்பு குறைவு என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள், கமலுக்கு நெருக்கமானவர்கள்.

நமது அம்மா
நமது அம்மா

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. ஆனால், கலையுலகில் 44 ஆண்டுகால நண்பர்களை அரசியல் பிரித்துவிடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பை உருவாக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. இன்னொன்றையும் கமலுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 'இப்போது ரஜினி பேச்சுகள் அவருடையதாக இருந்தாலும், வசனங்கள் எல்லாம் கமலுடையது' என்று கண்சிமிட்டுகிறார்கள்.

`மக்கள் நலனுக்காக இணைவோம்!' - ஒரே குரலில் கமல், ரஜினி
பின் செல்ல