Published:Updated:

துப்பாக்கிச்சூடு: ``எடப்பாடி பழனிசாமிதான் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்!'' - கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

``தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்தப் போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்'' - கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதில் பலர் போலீஸாரால் சுட்டுக்கொல்லபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை முடிந்திருந்த நிலையில், நேற்றைய தினம் அது தொடர்பான அறிக்கை வெளியானது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்துவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இப்போதும், துப்பாக்கிச்சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்தப் போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.