நேற்று நாடாளுமன்றத்தில் 2022 -2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ``நம் பிரதமர் குறுகிய பார்வை கொண்டவராக இருக்கிறார். அதிகாரத்திலிருந்து பா.ஜ.க-வை அகற்றி கடலில் தூக்கி எறிய வேண்டும். பா.ஜ.க என்ன செய்தாலும் நாங்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம். பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. நம் அரசியல் அமைப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி வளர்த்து செல்வதும், தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் லுங்கி அணிந்து செல்வதும் வளர்ச்சியை தருமா? ஆடைகளை மாற்றி மாற்றி அணிவதால் நாடு வளர்ச்சியடையப் போகிறதா?" என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.