Published:Updated:

``திடீர் பக்தி வேஷம்; பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸைவிட ஒருபடி மேலே போய்விட்டார் கெஜ்ரிவால்!'' - கி.வீரமணி

கி.வீரமணி

`` `லட்சுமி விலாஸ் பேங்க்‘ ஏன் காலாவதி ஆயிற்று... லட்சுமி பேரிலுள்ள வங்கியின் கதை எப்படி முடிந்தது என்பதை டெல்லி ஆம் ஆத்மி முதலமைச்சர் அறியாதவரா?'' - கி.வீரமணி

``திடீர் பக்தி வேஷம்; பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸைவிட ஒருபடி மேலே போய்விட்டார் கெஜ்ரிவால்!'' - கி.வீரமணி

`` `லட்சுமி விலாஸ் பேங்க்‘ ஏன் காலாவதி ஆயிற்று... லட்சுமி பேரிலுள்ள வங்கியின் கதை எப்படி முடிந்தது என்பதை டெல்லி ஆம் ஆத்மி முதலமைச்சர் அறியாதவரா?'' - கி.வீரமணி

Published:Updated:
கி.வீரமணி

`புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி ஆகிய இந்துக் கடவுள்களின் படங்களை அச்சிடலாம்’ என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இத்தகைய செயல்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க, செல்வத்தைக் கொழிக்கச் செய்யும் லட்சுமியின் படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சடிக்க வேண்டும் என்று ஐஐடி-யில் படித்தவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க முன்னெடுக்கும் மதவாதத்தைக் கையில் எடுத்து அரசியல் ஆதாயம் தேடும் யுக்தியே இது. மேலும், இது அரசமைப்புச் சட்டம் 51-ஏ(ஹெச்) கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரானது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

`லட்சுமி விலாஸ் பேங்க்' ஏன் காலாவதி ஆயிற்று... லட்சுமி பெயரிலுள்ள வங்கியின் கதை எப்படி முடிந்தது என்பதை டெல்லி முதலமைச்சர் அறியாதவரா... பிறகு ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அதுவும் தேர்தல் வித்தைதான். இந்துத்துவா வாக்குவங்கியை வசீகரித்து இழுப்பதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸைவிட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாகவைத்து இப்படி ஒரு துருப்புச்சீட்டை இறக்கியிருக்கிறார்.

முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார். இளைஞர்களை ஈர்க்க புதுப் புது உத்தி. இப்போது எங்கே, எந்தச் சரக்கு அதிகமாக விலை போகிறதோ, அங்கே அதை விற்று லாபம் தேட நினைப்பதுபோல, காத்திருந்தவன் புதையலை நேற்று வந்தவன் பறித்துக்கொண்டுபோன கதைபோல, இது அவரது பக்தி வேஷம்.

பாஜக - அமித் ஷா, மோடி
பாஜக - அமித் ஷா, மோடி

நம்ம லட்சுமி என்ற செல்வக் கடவுள் ஏன் அமெரிக்காவில் குடியேறிவிட்டு, நம்ம ரூபாயை இப்படித் திண்டாடவிடுகிறாள்... துபாய் முதலிய பெட்ரோலிய நாடுகளில் இப்படி லட்சுமி ஏன் புலம்பெயர்ந்து போய்விட்டார் என்ற கேள்வி கேட்கப்பட்டால், இந்த ‘பிரகஸ்பதிகள்’ என்ன பதில் கூறுவார்கள்... இப்படிப்பட்டவர்கள் எதில் போட்டியிடுகிறார்கள் பாருங்கள், இளைஞர்களே, புரிந்துகொள்ளுங்கள்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.