Published:Updated:

``ஒருநாள் தேசியக்கொடி காவியாக மாறலாம்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்

கர்நாடகா RSS தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் ( ட்விட்டர் )

`கடந்தகாலங்களில் காவிக்கொடியை தேசியக் கொடியாக மாற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால் யாருக்குத் தெரியும்? ஒரு நாள் காவிக்கொடி நமது தேசியக்கொடியாக மாறக்கூடும்.' - கல்லட்கா பிரபாகர் பட்.

``ஒருநாள் தேசியக்கொடி காவியாக மாறலாம்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்

`கடந்தகாலங்களில் காவிக்கொடியை தேசியக் கொடியாக மாற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால் யாருக்குத் தெரியும்? ஒரு நாள் காவிக்கொடி நமது தேசியக்கொடியாக மாறக்கூடும்.' - கல்லட்கா பிரபாகர் பட்.

Published:Updated:
கர்நாடகா RSS தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் ( ட்விட்டர் )

கர்நாடகா கல்லூரி ஒன்றில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி வளாகத்திலிருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு மாணவர்கள் சிலர் கம்பத்தில் காவிக்கொடியைப் பறக்கவிட்டனர். மாணவர்களின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, ``என்றாவது ஒருநாள் இந்தியாவின் தேசியக்கொடியாகக் காவிக்கொடி இருக்கும். தேசியக்கொடிக் கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றியதில் என்ன தவறு உள்ளது. மூவர்ணக்கொடி தற்போது தேசியக்கொடியாக உள்ளது. இதனால் அதை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையானது.

தேசியக்கொடிக் கம்பத்தில் காவிக்கொடி
தேசியக்கொடிக் கம்பத்தில் காவிக்கொடி

அதைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், ``பா.ஜ.க-வுக்கு தேசியக்கொடியின் மீது மரியாதை இல்லை. ஈஸ்வரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும்" எனச் சட்டப்பேரவை வளாகத்தில் இரவு பகலாக உறங்கிப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்நாடக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், ``எதிர்காலத்தில் மூவர்ணக்கொடியை மாற்றும் வரை நாம் அதை மதிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைச்சர் ஈஸ்வரப்பா
அமைச்சர் ஈஸ்வரப்பா
ட்விட்டர்

கடந்த காலங்களில் காவிக்கொடியை தேசியக்கொடியாக மாற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால் யாருக்குத் தெரியும்? ஒருநாள் காவிக்கொடி, நமது தேசியக்கொடியாக மாறக்கூடும். மூவர்ணக்கொடிக்கு முன், பிரிட்டிஷ் கொடியும், அதில் நிலவு சின்னத்துடன்கூடிய பச்சைக் கொடியும்தானே இருந்தன!

அதை மாற்றித்தானே இந்த மூவர்ணக்கொடியைக் கொண்டு வந்தோம். எனவே, இந்து சமாஜம் ஒன்று சேர்ந்தால் தேசியக்கொடியை மாற்ற முடியும்" என்று பேசினார்.

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவின் கருத்துக்கு ஆதரவாகக் கர்நாடக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் பேசியிருப்பது தற்போது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.