Published:Updated:

``மாணவியின் உடலை வாங்கச் சொல்லி பெற்றோரிடம் பேசிவருகிறோம்” - கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

``மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழுவும் ஆய்வு செய்துவருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்” - கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

``மாணவியின் உடலை வாங்கச் சொல்லி பெற்றோரிடம் பேசிவருகிறோம்” - கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர்

``மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழுவும் ஆய்வு செய்துவருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்” - கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

Published:Updated:
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கணியாமூர் கிராமத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது கொலை என்றும், அதற்கு நீதி வேண்டும் என்றும் கூறி கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தக் கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். அதையடுத்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு 19-ம் தேதி முதல் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.

கலவரம் | சின்னசேலம் தனியார் பள்ளி
கலவரம் | சின்னசேலம் தனியார் பள்ளி

அந்தக் கலவரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது உள்துறை செயலகம். அதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டார். அதேபோல புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை திருவல்லிக்கேணியில் துணை ஆணையராக இருந்த பகலவன் நியமிக்கப்பட்டார். இருவரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது பேசிய அவர், "தற்போதுள்ள சூழலில் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் சரியான சூழ்நிலை அமைய என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மாணவி மரணம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழுவும் ஆய்வு செய்துவருகிறது. மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக நியாயமான விசாரணை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். உயிரிழந்த மாணவியின் உடலைப் பெறச் சொல்லி அவரின் பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோருக்கு இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையை உணர்த்துவோம். அதேசமயம் அவர்களுக்கான நியாயம்‌ உறுதி செய்யப்படும். மாணவியின் பெற்றோர், அவர்களின் குழந்தையின் உடலைப் பெற்றுக்கொள்ள எங்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்கிறோம். ஒருவரின் வீட்டில் குழந்தைகளோ அல்லது வீட்டில் ஒருவரோ உயிரிழந்துவிட்டால் அதன் வலி எப்படி என்பது நமக்குத் தெரியும். அதற்கு எதையும் மாற்றாகக் கொண்டுவர முடியாது. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவர்களது இழப்பை ஈடுகட்ட முடியாது. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையை மாணவியின் பெற்றோர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோரிடம் பேசிவருகிறோம்” என்றார்.