Published:Updated:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: `பாஜக-வின் விசாரணைக்குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்’ - அண்ணாமலை

பி.ஜே.பி - அண்ணாமலை

``கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு குறித்து பாஜக தலைமையிலான விசாரணைக்குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்.’’ சேலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: `பாஜக-வின் விசாரணைக்குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்’ - அண்ணாமலை

``கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு குறித்து பாஜக தலைமையிலான விசாரணைக்குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்.’’ சேலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

Published:Updated:
பி.ஜே.பி - அண்ணாமலை

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஒன்பதாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் `இரண்டு மாத மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும், இதனால் மக்களுக்கு வருடத்துக்கு 6,000 ரூபாய் சேமிப்பாகும்’ என்றெல்லாம் கூறியது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இது மக்களின் தலையில் கல்லைப்போட்டதுபோல இருக்கிறது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறும் தி.மு.க அரசு பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

குறிப்பாக, மத்திய அரசின் மின் மானியம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்தால் மின் மானியம் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளாமல், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி, தற்போது நஷ்டம் ஏற்பட்டதால் மின் கட்டணத்தை உயர்த்தியதாகக் காரணம் கூறிவருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்தாலே மின்மிகு மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, ``தமிழ்நாட்டில் மூன்று விஷயங்களைச் சரிசெய்தாலே மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக இது திகழும். தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அனல்மின் நிலையங்களில் 60 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதை 80 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

சோலார் மின் சக்தி அமைக்க லஞ்சம் கேட்கிறார்கள். எனவேதான் சோலார் பொருத்துவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். இதைச் சரிசெய்து ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு 24 மணி நேரத்தில் சோலார் இணைப்பு பெற வசதி செய்து தரப்பட வேண்டும்.

இதையெல்லாம் தி.மு.க அரசு செய்யாமல் மின் பற்றாக்குறை எனக் கூறியும், மத்திய அரசு நிர்பந்தத்தால் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 23-ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதற்குப் பிறகும் தமிழ்நாடு அரசு மின் உயர்வைக் குறைக்காவிட்டால், அனைத்து மின்வாரிய அலுவலகத்துக்கு முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

``கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கையாண்டவிதம் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சம்பவம் நடந்ததிலிருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட பிறகு பார்வையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேலும் இது போன்ற அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக உளவுத்துறை என்ன செய்துவந்தது... முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லாமல் போலீஸார் பெரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று திடீரென மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மாற்றி நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கண்துடைப்பு வேலைகளை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.

மேலும் கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த சிறுமியின் மரணத்துக்கு தமிழ்நாடு பா.ஜ.க-வின் மூலம் அமைக்கப்பட்ட தனிக்குழு போன்று, இந்த வழக்கையும் இரண்டு நாள்களில் கையில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்றார்.