Published:Updated:

``இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன்; நான் சொல்ல விரும்புவது தமிழ் வாழ்க"-பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

``காந்தி எதுவெல்லாம் நடக்கக் கூடாது என பயந்துகொண்டிருந்தாரோ, அவற்றையெல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம்.’’ - கமல்ஹாசன்

``இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன்; நான் சொல்ல விரும்புவது தமிழ் வாழ்க"-பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன்

``காந்தி எதுவெல்லாம் நடக்கக் கூடாது என பயந்துகொண்டிருந்தாரோ, அவற்றையெல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம்.’’ - கமல்ஹாசன்

Published:Updated:
கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன் 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதையொட்டி சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், ``அரசியல் என்பது சிலருக்குப் பிழைப்பு, சிலருக்கு வாழ்வதற்கான வழி, சிலருக்கு கெளரவம், சிலருக்கு தொழில். ஆனால், நமக்கு அரசியல் என்பது கடமை. `பிக் பாஸி’ன் மூலமாக நான் மக்களுடன் உரையாடுகிறேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் செய்யும் நல்ல காரியங்களுக்கு என் புகைப்படங்களைப் போடுவதில்லை. நல்லவற்றுக்கு அடையாளம் தேவையில்லை. எனக்கு புத்தரைப் பிடிக்கும். அவர் தேர்ந்தெடுத்த பாதை மிகக் கடினமானது. அவர் கடவுள் மறுப்பைவிட மனிதநேயத்தைத்தான் கடவுளாகக் கருதினார்.

ஆனால், இன்று நாம் அவரையே கடவுளாகக் கருதுகிறோம். காந்தி எதுவெல்லாம் நடக்கக் கூடாது என பயந்துகொண்டிருந்தாரோ அவற்றையெல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். நான் நடித்த `ஹே ராமி’ல் சித்திரிக்கப்பட்ட அனைத்தும் இன்று நடந்துகொண்டிருக்கின்றன.

எனக்குப் பெரியார் பாதிப்பு உண்டு. ராமானுஜரின் பாதிப்பும் உண்டு. இரண்டு பேரின் வேலைகளும் ஒன்றாக இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். அதோடு காந்தியாரின் பாதிப்பும் உண்டு. அவரும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறார்.

 கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் கடவுளை நினைக்காத ஆள் என விமர்சிக்கிறார்கள். நான்தான் மனிதனை நினைத்துக்கொண்டிருக்கிறேனே... விரைவில் நான் உங்களுடன் உரையாடும் வகையில் பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். அதை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

ஏன் இப்பல்லாம் இந்திப் படத்தில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். அப்படி இருக்கிற நான் `இந்தி ஒழிக’ என்று சொல்ல மாட்டேன். சிறு வயதில் சொல்லியிருக்கேன். அப்போது எனக்குத் தெரியாது. நான் சொல்ல விரும்புவது `தமிழ் வாழ்க. நீடூழி வாழ்க’ என்பதுதான்" எனப் பேசினார்