Published:Updated:

``ஏறு தழுவுதல் நம் அடையாளம்; எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்!" - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

``ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி." - கமல்ஹாசன்

தமிழகத்தின் மிகவும் பிரபலமான பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்திருந்த நிலையில், விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள், அதற்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. அது தொடர்பான வழக்கில் தமிழக அரசும், `ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல, உச்ச நீதிமன்ற அதிகாரிகள் ஒருமுறை அதனை நேரில்வந்து பார்க்கவேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததையடுத்து, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வியெழுந்தது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று, `2023-ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுவருகின்றன' எனத் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.

``ஏறு தழுவுதல் நம் அடையாளம்; எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்!" - கமல்ஹாசன்

அதில், ``ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.