Published:Updated:

"என் பயணத்தைப் புரிந்துகொண்டால் போதும்...'' - பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளும் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் பாரத் ஜோடோ யாத்திரையில் வரும் 24-ம் தேதி டெல்லியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சில முக்கிய முடிவுகளை கமல்ஹாசன் எடுப்பார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தேர்தல் வியூகம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கியதாகவும், அப்போது ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் பாரத் ஜோடோ யாத்திரையில் வரும் 24-ம் தேதி டெல்லியில் கலந்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மேலும், அவருடன் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளவிருப்பதாகவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "என் பயணத்தைப் புரிந்துகொண்டாலே, கூட்டணி தொடர்பாக நான் எந்த திசையில் பயணிக்கிறேன் என்பது புரியும். விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். பூத் கமிட்டி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன" எனத் தெரிவித்திருக்கிறார்.