Published:Updated:

மக்கள் நீதி மய்யம் 2.0: புதிய நிர்வாகிகள் நியமனம்! இயக்கங்கள் இணைப்பு; கமலின் திட்டமென்ன?!

கமல், மக்கள் நீதி மய்யம்

இந்தக் கூட்டத்தில், கட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவிருப்பதாகவும், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் 2.0: புதிய நிர்வாகிகள் நியமனம்! இயக்கங்கள் இணைப்பு; கமலின் திட்டமென்ன?!

இந்தக் கூட்டத்தில், கட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவிருப்பதாகவும், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
கமல், மக்கள் நீதி மய்யம்
சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி, முக்கிய நிர்வாகிகள் விலகல் என அடுத்தடுத்த சறுக்கல்களால் துவண்டுபோயிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை, பட்டிதொட்டியெங்கும் கட்சியைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குள் கட்சிக் கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார், அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாகக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. 142 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு, 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுமட்டுமல்ல, கட்சி தொடங்கிய ஓராண்டில், அதாவது கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 3.7 சதவிகிதமாக இருந்த அந்தக் கட்யின் வாக்குவங்கி, இந்தத் தேர்தலில் 2.45 சதவிகிதமாகக் குறைந்தது. இது ஒருபுறமிருக்க, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான, மகேந்திரன், முருகானந்தம், சி.கே.குமரவேல், சந்தோஷ் பாபு என ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர்கள் கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதற்கு கமல்ஹாசனும் விளக்கம் அளித்தார்.

சிவ.இளங்கோ - கமல் - செந்தில் ஆறுமுகம்
சிவ.இளங்கோ - கமல் - செந்தில் ஆறுமுகம்
Senthil arumugam twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தினமும் கட்சி அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் கமல்ஹாசன். கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையிலும் ஈடுபட்டுவந்துள்ளார். அப்போது சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலுக்கான சமிக்ஞைகளும் தென்பட ஆரம்பித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையவழிக் கலந்துரையாடல் கூட்டம் நாளை (26-ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவிருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு, மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட பயணம், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுதல் ஆகிய முக்கிய வி‌ஷயங்கள் பற்றி கமல் கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் இணையம் வாயிலாகப் பங்கேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், கட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவிருப்பதாகவும், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி நம்மிடம் பேசியபோது,

'``அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இணையவழிக் கூட்டம். தேர்தல் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட அறிஞர்களிடமும் கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுவந்தார் எங்கள் தலைவர். தவிர, செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ ஆகிய இருவரும் தாங்களாகவே முன்வந்து, மய்யம் 2.0 என்கிற பெயரில் கட்சிக்கு சில யோசனைகளையும் பரிந்துரைத்துள்ளனர். எங்கள் தலைவர் அனைத்தையும் யோசித்து சில திட்டங்களை வகுத்திருக்கிறார். நாளை காலை 11 மணிக்கு கட்சிக்காரர்களிடம் அதைத் வெளிப்படுத்தவிருக்கிறார். தவிர, பொதுச்செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அறிவிக்கவிருக்கிறார்.

பல்லாவரம் தொகுதி வேட்பாளர் செந்தில் ஆறுமுகம்
பல்லாவரம் தொகுதி வேட்பாளர் செந்தில் ஆறுமுகம்

மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல், பிற அணிகளுக்கும் நிர்வாகிகளை அறிவித்து, அவர்களுக்கான பணிகள் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்படவுள்ளது. கட்சி நிர்வாகிகள் யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய தயாரிப்புகள் குறித்தும் தலைவர் பேசவுள்ளார். செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ உள்ளிட்டவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது. தவிர, ஒருசில இயக்கங்கள் மய்யத்தில் இணைக்கப்பட உள்ளன. எந்தவித சித்தாந்தங்களுக்கும் சிக்கிவிடாமல், வெகுஜன மக்களுக்கான பல திட்டங்களைக் கொண்டிருப்பது எங்கள் கட்சி. தேர்தல் தோல்விகள் எங்களை முடக்கிவிடாது. எங்கள் தலைவரின் தோல்விக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் வருத்தப்பட்டது. எங்களின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான தொடக்கபுள்ளியே அதுதான். மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெறுவோம்'' என்கிறார் நம்பிக்கையாக.

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததற்கு அந்தக் கட்சிக்கு கிராம அளவில் கட்டமைப்புகள் இல்லை என்பதே முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. கடந்த ஜனவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியதும் அதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகான முதல் நடவடிக்கையே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கிராம அளவில் கட்சியின் கட்டமைப்பை வளப்படுத்துவது குறித்தும் இருப்பது அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism