Published:Updated:

``ஏன் ஹே ராம்..?” ; ``தமிழர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்” - கமல், ராகுல் சுவாரஸ்ய உரையாடல்

கமல், ராகுல்

`` `தமிழர்கள் தங்களைத் தனித்தீவில் வாழ்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள், மொழிவெறி பிடித்தவர்கள்' என்றெல்லாம் பலர் நினைக்கிறார்கள். அனைவருக்குமே அவர்களின் மொழியைப் பற்றிய பெருமிதம் இருக்கும். அதுபோலத்தான்.” - கமல்

``ஏன் ஹே ராம்..?” ; ``தமிழர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்” - கமல், ராகுல் சுவாரஸ்ய உரையாடல்

`` `தமிழர்கள் தங்களைத் தனித்தீவில் வாழ்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள், மொழிவெறி பிடித்தவர்கள்' என்றெல்லாம் பலர் நினைக்கிறார்கள். அனைவருக்குமே அவர்களின் மொழியைப் பற்றிய பெருமிதம் இருக்கும். அதுபோலத்தான்.” - கமல்

Published:Updated:
கமல், ராகுல்

நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட ராகுல், கமல் உரையாடலின் காணொளி தற்போது ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.

``ஏன் ஹே ராம்..?” ; ``தமிழர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்” - கமல், ராகுல் சுவாரஸ்ய உரையாடல்

அதில் ராகுல் காந்தி, கமலுக்கு புலி ஓவியத்தைப் பரிசாக அளித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் சுவாரஸ்யமான பகுதிகள்...

ராகுல் காந்தி: தற்போது இந்தியாவில் நடப்பவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... வட இந்தியர்களின் பார்வையைவிட, தென்னிந்தியர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கும். உங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

கமல்ஹாசன்: அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களின் பார்வையும், எங்களின் பார்வையும் ஒன்றுதான். நமக்கு அருகில் நிகழும், சமீபத்தியச் செய்திகளையே நினைவில்கொள்கிறோம். ஆனால், நாம் வரலாற்றை மறந்துவிட்டோம். நான் காந்தியைப் பற்றி தற்போது அதிகம் பேசுகிறேன். சூழல் காரணமாக அப்போது, நான் காந்தியை அதிகமாக விமர்சித்தேன். 'வரலாற்றைப் படி' என்று என் தந்தை கூறுவார். 25 வயதில்தான் காந்தியின் வரலாற்றை நான் அறிந்தேன். அதன் விளைவாகவே 'ஹே ராம்' படத்தை இயக்கினேன். என் தந்தைக்கு மன்னிப்புக் கூறும்விதமாக, `ஹே ராம்’ படத்தை எடுத்தேன்.

ராகுல் காந்தி: தமிழர்களை நேசிக்கும் ஒருவனாக, அங்குள்ள மக்களை மேலும் புரிந்துகொள்ள முயல்கிறேன். தமிழின் சித்தாந்தம்தான் என்ன?

கமல்ஹாசன்: மலையாளிகள்போல, தெலுங்கு பேசுபவர்களைப்போல... சித்தாந்தமெல்லாம் ஒன்றுதான். 'தமிழர்கள் தங்களைத் தனித்தீவில் வாழ்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள் தமிழர்கள், மொழிவெறி பிடித்தவர்கள்' என்றெல்லாம் பலர் நினைக்கிறார்கள். அனைவருக்குமே அவர்களின் மொழியைப் பற்றிய பெருமிதம் இருக்கும். அதுபோலத்தான் தமிழர்களுக்கும். தமிழகத்தின் கிராமங்களுக்குச் சென்று, `காந்தி, போஸ்...’ என்று சத்தமாக அழைத்தால்... காந்தி, போஸ் என்ற பெயரைக்கொண்ட யாரேனும் திரும்பிப்பார்ப்பார்கள். அவ்வளவு தேசப்பற்றுகொண்டவர்கள் தமிழர்கள். அவ்வப்போது மத்திய அரசு, தங்களைப் புறக்கணிப்பதாக உணர்வார்கள். அவை நிரந்தரம் அல்ல.

``ஏன் ஹே ராம்..?” ; ``தமிழர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்” - கமல், ராகுல் சுவாரஸ்ய உரையாடல்

ராகுல் காந்தி: நீங்கள் ஃபேஷன் பிசினஸ் செய்வதாகச் சொன்னீர்கள்... அதனாலேயே உலகின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அமெரிக்கா, சீனாவுக்கு மத்தியில் இந்தியாவுக்கான இடம் எங்கு இருக்கிறது?

கமல்ஹாசன்: சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இந்தியா எவ்விதத்திலும் குறைந்த நாடு அல்ல. ஆனால், மேலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நமது திறமையை இங்கேயே பூட்டிவைக்கக் கூடாது. இந்தியர்களின் திறமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள், பல நாடுகளில் விற்பனையாக வேண்டும். நாம் தற்போது ஜி20 நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். அதற்குப் பல அரசுகள் காரணம். ஓர் அரசு மட்டுமே காரணம் அல்ல.

கமல்ஹாசன்: இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிப்புறப் பாதுகாப்பைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

ராகுல் காந்தி: 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. நம் எதிர் நாட்டு ராணுவத்தினர், எல்லைகளில்தான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இல்லை. சைபர் தாக்குதல், ஊடகங்கள் மூலம் தாக்குதல் என்று பல்வேறு வடிவங்களில் தாக்குதல் நடத்தலாம். 21-ம் நூற்றாண்டில் போர்களை எதிர்கொள்ள, நமக்கு ஓர் உலகளாவியப் பார்வை தேவை. இந்த இடத்தில்தான், நாட்டை ஆள்பவர்கள் தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். சீனா, 2,000 கிலோமீட்டர், இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துவிட்டது. இந்தத் தகவலை ராணுவத்தினர் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் பிரதமர் மறுக்கிறார். இந்த வேறுபாடுகளைப் பார்க்கும் சீனா, நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இந்திய அரசு பதிலடி கொடுக்காது என்று செயலில் இறங்குகிறது. 21-ம் நூற்றாண்டில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது தேசத்தின் ஒற்றுமைதான். நாட்டில் அமைதி நிலவ வேண்டும், மக்கள் சண்டையிடக் கூடாது. தேசம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் யாரிடமும் போர் செய்ய வேண்டாம். யாரும் தாக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலே போதும். நம் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், சீனத் தாக்குதலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. ரஷ்யா எப்படி உக்ரைனை எச்சரித்ததோ... அதேபோலத்தான் இந்தியாவை எச்சரிக்கிறது சீனா. இந்தியர்கள் சண்டையிடும்போது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, பொருளாதாரச் சரிவு போன்ற சூழல்கள் ஏற்படும்போது அதை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. இதைப் பற்றியெல்லாம் ஆள்பவர்கள், ஊடகத்துறையினரிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை... எதிர்க்கட்சிகளிடம் பேசினால், அவர்களுக்குச் சில யோசனைகளை எங்களால் கொடுக்க முடியும். ஆனால் அவர்கள் எதையும் கவனிப்பதில்லை.

``ஏன் ஹே ராம்..?” ; ``தமிழர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்” - கமல், ராகுல் சுவாரஸ்ய உரையாடல்

'உற்பத்தித்துறையில் சீனாவுடன் போட்டி போடுவதற்கு யாரும் இல்லை' என்று கூறுவதை நான் ஏற்கவில்லை. உற்பத்தி என்று வரும்போது, மேற்கத்திய நாடுகளால், சீனாவின் இடத்தைப் பிடிக்க முடியாது. ஆனால் இந்தியாவால், சீனாவின் இடத்தைப் பிடிக்க முடியும். இந்தியாவில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். மேற்கத்திய நாடுகளில் தலைசிறந்த உற்பத்தி நிலையங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால், அவர்களால் சீனாவைப்போல மிகப்பெரிய அளவிலான உற்பத்தியைச் செய்ய முடியாது. இந்தியாவால், சீனாவைப்போல உலகுக்கே பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். நம் பிள்ளைகள் வேலையின்மையால் தவிக்கிறார்கள். விவசாயத்தால் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கமல்ஹாசன்: போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கான வக்கீல்கள், பொறியாளர்களை உருவாகிக்கொண்டிருக்கிறனர். மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். நான் சார்ந்திருக்கும் துறையையே எடுத்துக்காட்டாகக் கூறுகிறேன். 200 வேலைவாய்ப்புகள், ஒரு திரைப்படத்தால் உருவாகிறது. ஆனால், அந்தத் துறைக்கு ஐடிஐ (ITI -Industrial Training Institute) இல்லை...

ராகுல் காந்தி: இதை ஒருவரின் திறமையை அவமதிக்கும் செயலாக நான் பார்க்கிறேன். ஒருவரின் திறமையை மதிக்காமல், எப்படித் திறன் மேம்பாட்டைப் பற்றிப் பேச முடியும்... நான் பெல்லாரியை உதாரணமாகக் கூறுகிறேன். சீனாவுக்குச் சவால்விடும் அளவுக்கு இருந்த, 'இந்தியாவின் ஜீன்ஸ் தலைநகரம்' என்று அழைக்கப்பட்ட பெல்லாரி, பண மதிப்பிழப்பினாலும், ஜிஎஸ்டி-யினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, இன்று மூடப்படும் நிலையில் இருக்கிறது. 4.5 லட்சம் பேர் வேலை பார்த்த நகரில், இன்று 50 ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

கமல், ராகுல்
கமல், ராகுல்

கமல்ஹாசன்: ஆட்சியில் இருப்பவர்கள் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். கஜா புயலின்போது இதை நான் உணர்ந்தேன். அந்தச் சூழலில் கட்சி வேறுபாடுகளெல்லாம் முக்கியமாகத் தெரியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதே முக்கிய விஷயமாகத் தெரிந்தது. அரசியல்வாதிகள், அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதை மக்கள் விரும்புவதில்லை. பொதுமக்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் தங்களின் குறைகளை முன்வைக்க தயங்கக் கூடாது. மக்களுக்கு, அரசியல்வாதிகள் பதில் கூறியே ஆக வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவருமே மக்களுக்கு சேவை‌ செய்வதற்கே பணியில் இருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.