Published:Updated:

``ஏன் நடிக்கப் போனாய் என நாக்கின் மேல் பல்லைப்போட்டு இனி கேட்காதீர்கள்" - மநீம கூட்டத்தில் கமல்

மக்கள் நீதி மய்யம் - கமல்

கூட்டத்தில் பேசிய முன்னணி நிர்வாகிகள் அனைவரும் `விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி குறித்து உற்சாகமாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

``ஏன் நடிக்கப் போனாய் என நாக்கின் மேல் பல்லைப்போட்டு இனி கேட்காதீர்கள்" - மநீம கூட்டத்தில் கமல்

கூட்டத்தில் பேசிய முன்னணி நிர்வாகிகள் அனைவரும் `விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி குறித்து உற்சாகமாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

Published:Updated:
மக்கள் நீதி மய்யம் - கமல்

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் சார்பில், ரத்த உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த ரத்ததானக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கிவைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முதற்கட்டமாக சென்னையில் இந்தத் திட்டம் தொடங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னணி நிர்வாகிகள் அனைவரும் `விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி குறித்து உற்சாகமாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

கவிஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சினேகன் பேசும்போது,

``தமிழ்நாடு முழுவதும் முதன்முதலில் தன் நற்பணி மன்றம் மூலம் ரத்த தானத்தைத் தொடங்கிவைத்த முதல் மனிதரும், தலைவரும் நம்மவர் அவர்கள்தான். ஏன், ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய முதல் நடிகரும், முதல் மனிதரும், முதல் தலைவரும் கமல்ஹாசன்தான். `விக்ரம்’ படத்தில் அரசியல் பேசியிருக்கிறாரா என்று நிறைய பேர் கேட்டார்கள். படமே அரசியல்தானே... மேடையில் கத்திப் பார்த்தாரு, அறிக்கையில கத்திப் பார்த்தாரு, ஒவ்வொரு ஊருக்கும் போய் மக்களைச் சந்திச்சாரு, எதிர்க்கட்சிகளைச் சாடிப் பார்த்தோம், குற்றங்களை ஓங்கி உரக்கச் சொன்னோம், ஊழல்களுக்கு எதிரான சில ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கிவெச்சோம். ஆனால், அன்னைக்கு எல்லாம் காதுல ஏறாதது, நான் கலைஞனா இருந்து கத்தினால்தான் உங்க காதுலே ஏறும் என்றால் அதையும் நான் செய்யத் தயார் என்று களத்தில் இறங்கியிருக்கிறார். `பத்தல, பத்தல...’ ஒரு சாங் பத்தாதா மொத்த அரசியலையும் தூக்கி எறியுறதுக்கு... மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அந்த ஒரு சவுக்கு பத்தாதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பகாலங்களில் இருந்தே தலைவரின் படங்கள் அரசியல் பேசிக்கொண்டேதான் வந்திருக்கின்றன. சாதியத்துக்கு எதிராக, மதத்துக்கு எதிராக, வன்முறைகளுக்கு எதிராக, போதைப்பொருள்களுக்கு எதிராக தொடர்ந்து ஜனநாயகத்துக்குத் தேவையானவற்றை அவரின் படங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அரசியல்வாதிகளின் மொழியில் இறங்கி வந்து பேசிய படம் `விக்ரம்.’ அதற்கான முதல்படி `விக்ரம்.’ எங்களுடைய கோரிக்கையெல்லாம் அதே வேகத்தில் தலைவன் இருக்கிறான் படமும் வர வேண்டும். நீங்க போய்க்கொண்டே இருங்கள், உங்கள் பின்னால் நாங்கள் சாட்டையைச் சுழற்றிக்கொண்டே வருகிறோம்'' என்றார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

நிகழ்ச்சியில் கடைசியாகப் பேசிய கமல்ஹாசன், ``சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான். இனிமேல் ஏன் என்னை நடிக்கப்போனாய் என நாக்கின் மேல் பல்லைப் போட்டுக் கேட்காதீர்கள். அந்தப் பணத்தைத்தான் என் கட்சி வேலைகளுக்குப் பயன்படுத்தப்போகிறேன். நான் கட்சிக்காகக் கொடுக்கப் போகும் தொகையெல்லாம் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுக்குத் தெரியும்.

கமிஷனுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை, என் கடமையைச் செய்ய வந்திருக்கிறேன். என்னுடைய படங்களில் அரசியலும் சமூகநலன் சார்ந்த விஷயங்களும் வந்துகொண்டேதான் இருக்கும். அது காமெடிப் படமாக இருந்தாலும்கூட வரும். டிரக்ஸ் பற்றிய வார்னிங் `நம்மவர்’ படத்திலேயே இடம்பெற்றிருக்கும். ஒன்றியம் என்றால் எங்களைத்தான் சொல்கிறீர்களா என்று கோபித்துக்கொள்கிறார்கள். நான் எல்லா ஒன்றியத்தையும்தான் சொல்கிறேன். ஓட்டு எண்ணிக்கை மட்டும் அரசியல் அல்ல. நற்பணிதான் அரசியல்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism