Published:Updated:

`ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற்றால்...’ நீட் தேர்வு விலக்கு கேள்விக்கு கனிமொழியின் பதில் என்ன?

கனிமொழி

``ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற்றால், நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவில் கையெழுத்து போடச் சொல்வீர்களா... இது குறித்து அவரிடம் பேசியிருக்கிறீர்களா?” என்று கனிமொழியிடம் கேட்டபோது...

`ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற்றால்...’ நீட் தேர்வு விலக்கு கேள்விக்கு கனிமொழியின் பதில் என்ன?

``ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற்றால், நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவில் கையெழுத்து போடச் சொல்வீர்களா... இது குறித்து அவரிடம் பேசியிருக்கிறீர்களா?” என்று கனிமொழியிடம் கேட்டபோது...

Published:Updated:
கனிமொழி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல, பா.ஜ.க-வை எதிர்க்கும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

அதன்படி, தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் இருவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மறுபுறம் அரசியல் கட்சிகளும், தங்களின் ஆதரவு யாருக்கு என்று அறிவித்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், மாயாவதியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளில் ஆதரவைப் பெற யஷ்வந்த் சின்ஹா மாநிலம்வாரியாக தலைவர்களைச் சந்தித்து தனக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்தக் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, வி.சி.க சார்பாக சிந்தனைச் செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்று, தங்களை ஆதரவை யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெரிவித்தனர்.

கனிமொழி
கனிமொழி

இதையடுத்து, யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க எம்.பி-க்கள், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``ஒருவேளை யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற்றால், நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவில் கையெழுத்துப் போடச் சொல்வீர்களா... இதுகுறித்து அவரிடம் பேசியிருக்கிறீர்களா... என்று கேட்டபோது, ``வெற்றிபெற்றால் பார்த்துக்கலாம்" என்று கனிமொழி முடித்துக்கொண்டார்.