Published:Updated:

```நிர்பயா நிதி’யை மாநில அரசு என்ன செய்கிறது?” - கனிமொழி எம்.பி கேள்வியும் நிதின் கட்கரி பதிலும்

கனிமொழி
கனிமொழி

தமிழ்நாட்டில் கடைசியாக வந்த நிர்பயா நிதியை எதற்காக பயன்படுத்துவது எனத் தெரியவில்லை என அரசுத் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் நிர்பயா நிதியை மத்திய அரசு உருவாக்கியது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிர்பயா நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. நிர்பயா நிதியை தமிழக அரசு எப்படிப் பயன்படுத்தியிருக்கிறது என்பது குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.

கனிமொழி
கனிமொழி

சாலைப் போக்குவரத்துத் துறையில் பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் என்ன, பெண் பாதுகாப்புக்கான நிர்பயா நிதி ஒழுங்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்றும் குறிப்பாக சாலை போக்குவரத்து துறையில் இந்த நிதியைப் பயன்படுத்தி திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறதா என்றும் கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

மக்களவையின் கேள்வி நேரத்தில் பேசிய கனிமொழி எம்.பி, ``பெண்களின் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கடைசியாக வந்த நிர்பயா நிதியை எதற்காகப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை என அரசுத் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். எனவே, நிர்பயா நிதியை தமிழக அரசு எப்படிப் பயன்படுத்தியிருக்கிறது என்பதையும், நிர்பயா நிதியை பயன்படுத்தி சாலைப்போக்குவரத்து துறையில் பெண்களின் பாதுகாப்புக்கு என்று என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்" என்று கேள்வி எழுப்பினார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``பொதுவாகவே நிர்பயா நிதி திட்டங்களில் மாநில அரசுகள் 40% ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாடு உட்பட எந்த மாநில அரசும் 40 சதவிகிதத்தை அளிக்கும் நிலையில் இல்லை. மாநில அரசுகள் பங்களிக்கவில்லை என்றால் 100 சதவிகிதத்தையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிர்பயா நிதியானது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களின் துறையின் கீழ் வருவதால் அவரிடம் ஆலோசித்து தமிழகத்துக்கு சாலைப் போக்குவரத்துத் துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு திட்டங்களைச் செயல்படுத்துவோம்" என்று பதிலளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு