Published:Updated:

``தமிழ்நாட்டின் மொழி, பாரம்பர்யத்தை மறைத்துவிடலாம் என்ற பாஜக எண்ணம் பலிக்காது" - கனிமொழி எம்.பி

திருமண விழாவில் கனிமொழி

``தமிழ்நாட்டின் உரிமையை, மொழியை, பாரம்பர்யத்தை மறைத்துவிடலாம் என்ற பாஜக எண்ணம் பலிக்காது. இது திராவிட மாடல் ஆட்சி" என கனிமொழி எம்.பி பேசினார்.

``தமிழ்நாட்டின் மொழி, பாரம்பர்யத்தை மறைத்துவிடலாம் என்ற பாஜக எண்ணம் பலிக்காது" - கனிமொழி எம்.பி

``தமிழ்நாட்டின் உரிமையை, மொழியை, பாரம்பர்யத்தை மறைத்துவிடலாம் என்ற பாஜக எண்ணம் பலிக்காது. இது திராவிட மாடல் ஆட்சி" என கனிமொழி எம்.பி பேசினார்.

Published:Updated:
திருமண விழாவில் கனிமொழி

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வியின் மகன் இளவரசனின் திருமணம் நேற்று நடைபெற்றது. கமுதி அபிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தி.மு.க மகளிரணிச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., ``ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வி தற்போது கட்சியில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். இந்தத் திருமணவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவருவதைப்போல திராவிட மாடல் திருமணம். தி.மு.க-வை விமர்சனம் செய்பவர்கள் குடும்ப ஆட்சி நடத்துவதாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். ஒருமுறை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உங்கள் குடும்பம் என்றால் என்ன எனக் கேள்வி எழுப்பினர்.

திருமணவிழாவில் பேசிய கனிமொழி
திருமணவிழாவில் பேசிய கனிமொழி

அதற்கு, `என்னுடைய குடும்பம் என்பது ஒரு புகைப்படத்துடன் முடிந்துவிடாது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அத்தனை பேரும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’ என்றார். அதன் காரணமாகத்தான் கருணாநிதி உங்களை அழைக்கும்போது உடன்பிறப்பே என்று குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தார். அந்த அளவுக்கு தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை, மொழியை, பாரம்பர்யத்தை மறைத்துவிடலாம் என்ற பா.ஜ.க எண்ணம் பலிக்காது. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் வகையில் சுயமரியாதை ஆட்சியாக தி.மு.க ஆட்சி நடந்துவருகிறது. இது திராவிட மாடல் ஆட்சி.

பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் என அனைவரது கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கக்கூடியது இந்த ஆட்சி. எந்தவொரு கலவரம், பிரச்னையாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான், அடுத்தது குழந்தைகள். அது மாதிரி இடங்களில் அமைதியும் இருக்காது. முன்னேற்றமும் இருக்காது. ஆனால் தமிழ்நாடு அனைவருக்கும் முன்மாதிரி ஆட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன” எனக் கூறினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism