Published:Updated:

கனிமொழிக்கு முதல்வர் தகுதி... சிண்டு முடிகிறாரா, சீரியஸா பேசுகிறாரா சீமான்?

ஸ்டாலின் - கனிமொழி

சீமானின் இந்த கருத்து தி.மு.க வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, மாற்றுக்கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பேசி, தலைமைக்குள் சிண்டுமுடித்துவிட பார்க்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

கனிமொழிக்கு முதல்வர் தகுதி... சிண்டு முடிகிறாரா, சீரியஸா பேசுகிறாரா சீமான்?

சீமானின் இந்த கருத்து தி.மு.க வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, மாற்றுக்கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பேசி, தலைமைக்குள் சிண்டுமுடித்துவிட பார்க்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
ஸ்டாலின் - கனிமொழி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-வது ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 30-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வார் உருவப்படத்துக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளிக்கும்போது, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி குறித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. "முதல்வர் ஸ்டாலின் வாரிசு அரசியலை செய்வதில் விருப்பத்தோடு இருக்கிறீர்கள்தானே.

சீமான்
சீமான்

அப்படியென்றால், உங்கள் குடும்பத்தில் இருக்கும், உங்கள் தங்கை கனிமொழியை, இரண்டரை ஆண்டு சுழற்சி முறையில் முதல்வராக்குங்களேன். மகளிர் நிமிரட்டும். மாநிலம் உயரட்டும். ஐயா ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர் என்று நான் இன்றும் நினைக்கிறேன். அதை கட்சிக்காரர்களும் மறுக்கமாட்டார்கள். பொதுமக்களும் மறுக்கமாட்டார்கள். அப்படி கொடுத்தால், ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தார் என்று இருக்கட்டுமே" என்று பேசியிருந்தார் சீமான்.

சீமானின் இந்த கருத்து தி.மு.க வாட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, மாற்றுக்கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பேசி, தலைமைக்குள் சிண்டு முடித்துவிட பார்க்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூறுகையில், "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இது வேண்டாதவேலை. எங்கள் கட்சியின் விவகாரங்கள் குறித்து பேச அவரை யாரும் அழைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் கனிமொழி
நாடாளுமன்றத்தில் கனிமொழி

பின்புஏன் வம்படியாக வந்து பேசுகிறாரென்றே தெரியவில்லை. கனிமொழியின் திறமைக்கு சீமான் சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி,  தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இதே சீமான்தான், கனிமொழி குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவருக்கு தெரியவில்லையா அவரின் திறமை. கனிமொழி மிக திறமையானவர்.

அதை யாரும் மறுக்கவில்லை. ஏனென்றால், அவர் எங்களின் தலைவர் கலைஞரின் மகள். அவரின் திறமையால்தான், இன்று தி.மு.க-வின் டெல்லி முகமாக இருக்கிறார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். வருங்காலத்தில், அவர் நிச்சயம் மத்திய அமைச்சரவையை அலங்கரிப்பார். அப்போதும், இதே கருத்தை சீமான் முன்வைக்கிறாரா என்று பார்க்கலாம்.

கனிமொழி - ராகுல் காந்தி
கனிமொழி - ராகுல் காந்தி
ட்விட்டர்

சீமானும் தினமும் ஏதாவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலேயே, எங்கள் கட்சி குறித்து பேசியிருக்கிறார். இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும்." என்றனர் காட்டமாக...

சீமானின் கருத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்கியராஜனிடம் கேட்டபோது, " இதில் சிண்டு முடிக்க எதுவும் இல்லை. மகளிர் மேம்பாடு குறித்து தி.மு.க வெற்று விளம்பரத்தை, கனிமொழியை எடுத்துக்காட்டாக வைத்து சீமான் தோல் உரித்து காட்டி இருக்கிறார். அது சீரியஸ் டோன் தான்.

பாக்கியராஜன் நாதக
பாக்கியராஜன் நாதக

ஆனால், கனிமொழி குறித்து சீமான் பேசியதை யாராலுமே மறுக்கவே முடியாது. முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இரண்டே இரண்டு பெண்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுதான் மகளிர் மேம்பாடா? பாதிக்கு பாதிக்குக்கூட கொடுக்க வேண்டாம். குறைந்தபட்சம், மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிலாவது சீட் கொடுத்து இருக்கலாம்தானே. மகளிர் மேம்பாட்டுக்கு எது உதவுமோ அதை செய்யாமல், விளம்பரத்துக்காக எதையாவது பேசுவதே தி.மு.க-வின் வேலையாக இருக்கிறது" என்றார் சூடாக.