Published:Updated:

`சர்வாதிகாரியாக நான் செயல்படுவேன்!' - மு.க.ஸ்டாலின் சொன்னது குறித்து கனிமொழி விளக்கம்

"தி.மு.க கொடுத்த அழுத்தத்தால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது."

கனிமொழி
கனிமொழி

தூத்துக்குடி தொகுதி எம்.பி, கனிமொழி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தி.மு.க கோரிக்கையாக உள்ளது. தி.மு.க கொடுத்த அழுத்தத்தால்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. எப்போது தேர்தல் அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க-வும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது.

கனிமொழி
கனிமொழி

பா.ஜ.க - சிவசேனாவுக்குள் பல பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு பல குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. இப்போதுதான் பல குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

"எனக்கு தலைவர் போல் பேசவோ, எழுதவோ தெரியாது; ஆனால்?!"- பொதுக்குழுவில் தகித்த ஸ்டாலின்

முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தார்கள். ஆனால், எந்த முதலீடு ஈர்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை எந்தத் தொழில்நுட்பமும் வரவில்லை. மக்களின் செலவில் அவர்கள் வெளிநாட்டைச் சுற்றிப் பார்த்ததாக இருக்கட்டும். அவர்களுக்கு வாழ்த்துகள்.

`சர்வாதிகாரியாக நான் செயல்படுவேன்!' - மு.க.ஸ்டாலின் சொன்னது குறித்து கனிமொழி விளக்கம்

ஸ்டாலின் சர்வாதிகாரியாகச் செயல்படுவேன் என்று சொல்வது கட்சியின் வளர்ச்சிக்காக. முடிவெடுக்க வேண்டும் என்றால் அதைத் தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காகக் கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு" என்றார்.