Published:Updated:

உள்ளாட்சி `நிலவரம்' - கனிமொழி கறார் `மூவ்'... கலக்கத்தில் கரைவேட்டிகள்!

கனிமொழி
கனிமொழி ( தே.சிலம்பரசன் )

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ளாட்சிப் பதவிகளை `பேக்' செய்துவிடலாம் என்ற கனவில் இருந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர், கனிமொழியின் வேண்டுகோளால் நிலைகுலைந்து போயுள்ளனராம்.

``ஒரு ரகசிய சந்திப்பு பற்றி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்களே..!''

``உங்களுக்கும் தகவல் வந்துவிட்டதா? ரஜினியும் டி.டி.வி.தினகரனும் சென்னை புறநகரில் உள்ள பங்களாவில் நேரில் சந்தித்து அரசியல் நிலவரம்குறித்துப் பேசினார்கள் என்பதே அந்தத் தகவல். கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாம்.''

` `உள்ளாட்சித் தேர்தல் தேதியை எப்போதுதான் அறிவிக்கப்போகிறார்களாம்?''

``உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே வெகுவிரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும் முன், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நவம்பர் 28 அன்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க திடீர் மனுவைத் தாக்கல் செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.''

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

``தேர்தல் குறித்து அ.தி.மு.க தலைமை இப்போது என்ன நினைக்கிறதாம்?"

``ஒருவழியாக தேர்தலை நடத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். நவம்பர் 29-ம் தேதியே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கமும் தரத் தொடங்கிவிட்டார்கள். அதேபோல் புதிய மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்கும் உள்ளாட்சித் தேர்தல்தான் காரணம் என்கின்றனர்.''

``தி.மு.க முகாம் நிலவரம்?''

``வழக்கமாக பெண்களுக்காக ஒதுக்கிய உள்ளாட்சிப் பகுதிகளை தங்கள் மனைவி, மகள்களுக்கு கரைவேட்டிகள் பொட்டலம் கட்டி விடுவார்கள். இந்த முறை, கட்சிக்காகப் போராட்டங்களைச் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அந்தப் பதவிகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ளாட்சிப் பதவிகளை 'பேக்' செய்துவிடலாம் என்ற கனவில் இருந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர், கனிமொழியின் வேண்டுகோளால் நிலைகுலைந்து போயுள்ளனராம்.''

``தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகராக இருந்த சுனில் பதவி விலகிவிட்டாரே... என்ன காரணமாம்?''

``2015-ம் ஆண்டு சுனில் தி.மு.க-வுக்கு வந்த பிறகுதான் 'நமக்கு நாமே' திட்டத்தை தி.மு.க கையில் எடுத்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், சுனில்மீது சில விமர்சனங்கள் எழுந்தன. சுதாரித்த சுனில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மோடிக்கு எதிரான அலையை சமூக வலைதளங்கள்மூலம் ஏற்படுத்தினார் என்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் தனிமனிதத் தாக்குதலை சுனில் தலைமையில் செயல்படும் ஓ.எம்.ஜி குழு சரியாகக் கையாளவில்லை என்று ஸ்டாலின் மருமகன் சபரீசன் கருதியுள்ளார்.''

சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்
சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்

- சுனில் தி.மு.க ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேறியதன் முழு பின்னணி, திகார் சிறைவாசியாக ப.சிதம்பரம் 100 நாள்களைத் தாண்டிவிட்ட நிலையில் இனி.., உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி தரப்பினரும், சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி-யான ஜாபர்சேட் தரப்பினரும் மாலை நேரத்தில் மணிக்கணக்கில் ரகசியமாகச் சந்தித்ததன் பின்புலம் முதலான உள்விவகாரத் தகவல்களை ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

ரூ.40.34 கோடி மக்கள் வரிப்பணம் அம்போ!

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்க வழக்கின் வழக்கறிஞர் கட்டணம் மற்றும் இடைத்தேர்தல் செலவுகளுக்காக மக்கள் வரிப்பணம் விரயமான விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது ஜூனியர் விகடன். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 2017 செப்டம்பர் 18 முதல் இறுதித்தீர்ப்பு வெளியான 2018 அக்டோபர் 25 வரையில், நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்குக்காக ஆளுங்கட்சியும் தினகரன் தரப்பும் சட்டப்போராட்டம் நடத்தின. முதல்வர் எடப்பாடி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரமும் அரசு கொறடா சார்பில் முகுல் ரோஹத்கியும் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் ஆஜரான இந்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம், அரசு கஜானாவில் இருந்துதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குகளுக்கு தமிழக அரசின் பணம் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது என விசாரித்தபோது, வழக்கறிஞர் கட்டண விவரம், ஜூ.வி-க்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. > இது தொடர்பான முழு விவரம் அறிய > விகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு