Published:Updated:

இந்துக்களின் பாதுகாவலர் யார்?

கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
News
கனிமொழி

மோதிக்கொள்ளும் கனிமொழி, சசிகலா புஷ்பா

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க மகளிரணிச் செயலாளரும் மக்களவை எம்.பி-யுமான கனிமொழி, `இந்துக்களின் பாதுகாவலர் பெரியார்தான். இந்துக்களின் பாதுகாவலர் களாக பி.ஜே.பி-யினர் தங்களைக் கருதிக்கொள்ளக் கூடாது. அதற்கான தகுதியும் அவர்களுக்கு இல்லை. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பி.ஜே.பி தயாரா?’ என்று விளாசியிருந்தார்.

கனிமொழியின் இந்தக் கருத்து, காலம்காலமாக இந்துக்களின் பாதுகாவலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் பி.ஜே.பி-யினரிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க மாநிலங் களவை எம்.பி-யான சசிகலா புஷ்பா, இதுகுறித்து நம்மிடம் பேசினார். ‘‘பெரியார் வருவதற்கு முன்னரே பட்டியலினம் உட்பட 18 சமூக மக்களும் ஒன்றாக வசிக்கும் வகையில் முந்திரிக் குடியிருப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் அய்யா வைகுண்டர். இந்தத் திட்டத்தைத்தான் சமத்துவபுரம் குடியிருப்பாக திராவிடக் கட்சிகள் உருவாக்கின. அய்யா வைகுண்டரின் துவையல் பந்தித் திட்டம்தான் இன்று சமபந்தித் திட்டமாக மாறியுள்ளது. முலைவரிக்கு எதிரான தோல்சீலைப் போராட்டத்தில் வைகுண்டரின் பங்களிப்பு அளப்பரியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தலித் மக்களின் கல்வி, சமூக வளர்ச்சிக்காகப் போராடியவர் சுவாமி சகஜானந்தா. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றவர் வள்ளலார். யாருக்கும் சொல்லக் கூடாது என்று போதிக்கப்பட்ட ‘ஓம் நமோ நாராயணா’ மந்திரத்தை கோபுரத்தின் உச்சியில் நின்று உரக்கக் கூவியவர் ராமானுஜர். இவர்கள்தான் இந்து மக்களின் பாதுகாவலர்கள். பிள்ளையார் சிலையைத் தூக்கிப் போட்டு உடைத்த பெரியார் இந்துக்களின் பாதுகாவலர் அல்ல. `திருக்குறளை தேசிய நூலாக அறிவித் திருக்கலாம்’ என்று கூறும் கனிமொழி, தி.மு.க ஆட்சியில் இருந்தபோது திருக்குறளை மாநில நூலாகவேனும் அறிவிக்க வைத்திருக்கலாமே?” என்றார்.

சசிகலா புஷ்பா - கனிமொழி
சசிகலா புஷ்பா - கனிமொழி

கனிமொழியிடம் பேசினோம். ‘‘எந்தச் சாதிய உணர்வை நம் மீது புகுத்தினார்களோ, அதை எதிர்த்து கேள்வி எழுப்பிய சமூகம்தான் தமிழ்ச் சமூகம். ‘இறைச்சித்தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ?’ எனக் கேள்வி எழுப்பிய சித்தர்கள் காலம்தொட்டு புத்தம், ஜைனம் என்று பிறப்பால் ஏற்றத்தாழ்வு முறைகள் ஆயிரமாயிரம் வருடங்களாகக் கேள்வி எழுப்பப் பட்டுள்ளன. பெரும்பான்மையான இந்துக்கள் கோயிலுக்குள் நுழைவதற்கும் படிப்பதற்கும் போராடியவர் பெரியார். தி.மு.க கொண்டுவந்த இடஒதுக்கீடு உட்பட பல சீர்திருத்தத் திட்டங் களில் பயனடைந்தவர்கள் பெரும்பான்மை இந்துக்கள்தான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களால் பெரியார் மதிக்கப்படுகிறார். காரணம், அவர்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார். அவரளவுக்கு பெண் அடிமையை எதிர்த்தவர் எவரும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. பெரியார் என்றைக்குமே ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என நின்றதில்லை. அவரை தேர்தல் அரசியலுக் குள் கொண்டுவருவது மிகப்பெரிய முரண்நகை” என்றார்.