Published:Updated:

`50% எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் 25% இடம்கூட தரவில்லை'-தனித்துப் போட்டியிடத் தயாராகும் குமரி காங்கிரஸ்

குமரி காங்கிரஸ்

"எங்களது பொது எதிரியான பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக தி.மு.க-வுடன் எவ்வளவோ இறங்கிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாகப் பார்க்கும்போது 25% இடம்கூட எங்களுக்கு ஒதுக்கவில்லை" என்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்.

`50% எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் 25% இடம்கூட தரவில்லை'-தனித்துப் போட்டியிடத் தயாராகும் குமரி காங்கிரஸ்

"எங்களது பொது எதிரியான பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக தி.மு.க-வுடன் எவ்வளவோ இறங்கிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாகப் பார்க்கும்போது 25% இடம்கூட எங்களுக்கு ஒதுக்கவில்லை" என்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்.

Published:Updated:
குமரி காங்கிரஸ்

``கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளில் மூன்று காங்கிரஸ் வசமும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க வசம் தலா ஒரு சட்டசபைத் தொகுதியும் உள்ளன. கட்சி பலத்தின் அடிப்படையில் இல்லாமல் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் உள்ளாட்சியில் நாங்கள் கேட்கும் இடங்களைக்கூட தி.மு.க தர மறுக்கிறது. எனவே, தனியாகக் களம் காண்போம்" என கர்ஜிக்கின்றனர் குமரி காங்கிரஸ் நிர்வாகிகள். கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதில் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குமுறுகிறார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சிகள் வருகின்றன. அவற்றில் நாகர்கோவில் மாநகராட்சியில் 13 வார்டுகளே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி மற்றும் குளச்சல் நகராட்சி சேர்மன் பதவியும் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயத்திடம் பேசினோம். ``கிழக்கு மாவட்டத்தில் ஆறு பேரூராட்சிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நெய்யூர் பேரூராட்சியுடன் ஏழு இடங்கள் காங்கிரஸுக்கு வேண்டும் என கேட்டிருக்கிறோம். அதுபோல நாகர்கோவில் மாநகரத்தில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 17 வார்டுகள் வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். தி.மு.க இதற்கு உடன்படவில்லையென்றால் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்" என்றார்.

கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங்
கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திலும் பங்கீடு இழுபறியாகவே உள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு என மூன்று நகராட்சிகளும், 23 பேரூராட்சிகளும் உள்ளன. அதில் கொல்லங்கோடு நகராட்சியும், 11 பேரூராட்சிகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்காமலிருந்தால் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த வகையில் நாங்கள் போட்டியிடுவோம்" என்கிறார் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் மாநகராட்சிகளில் ஒரு சீட்கூட காங்கிரஸுக்கு நிர்ணயம் செய்யவில்லை. அதுபோல எந்த நகராட்சியும் நிர்ணயம் பண்ணவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபைத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். மேற்கு மாவட்டத்தில் மூன்று சட்டசபைத் தொகுதிக்ளில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல் நகராட்சி ஆகியவை தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால் மேற்கு மாவட்டத்திலுள்ள மூன்று நகராட்சிகளில் இரண்டு நகராட்சிகளை காங்கிரஸுக்கு கேட்டோம். கொல்லங்கோடு நகராட்சி மட்டும் ஒதுக்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 23 பேரூராட்சிகளில் 12 கேட்டோம். 11 தருவதாகச் சொன்னார்கள்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. ஆனாலும், எங்களது பொது எதிரியான பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக தி.மு.க-வுடன் எவ்வளவோ இறங்கிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாகப் பார்க்கும்போது 25 சதவிகிதம் இடம்கூட எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் கேட்டதற்கும் தி.மு.க தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, தனியாகப் போட்டியிடத் தயாராகிவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism