கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள் எல்லோருமே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் தி.மு.க; மூன்று பேர் காங்கிரஸ். இதனால், மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பஞ்சமில்லை. இந்த வரிசையில் இப்போது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி-யான ஹெச்.வசந்தகுமாரும் சேர்ந்திருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து சாலைகளையும் சீரமைக்க வலியுறுத்தி நாகர்கோவில், மார்த்தாண்டம் தொடங்கி டெல்லி வரை தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளார் வசந்தகுமார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘நீங்கள் எம்.பி-யாகப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?”

‘‘தனியார் காடுகள் சட்டம், சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம், சரக்குப்பெட்டக மாற்று முனையம் எனப் பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் மூலம் கன்னியாகுமரியை மக்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாற்ற முயல்கிறார்கள். சரக்குப்பெட்டக மாற்று முனையம் இங்கு தேவையில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கோட்டாறு, தக்கலைப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. மேம்பாலம் கட்டப்பட்டால் அந்தப் பகுதிகளில் இருக்கும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், ‘மேம்பாலம் கட்ட வேண்டாம்’ என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திவருகிறேன். கடல் அரிப்பைத் தடுப்பதற்காக, கடற்கரை ஓரங்களில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் பிளாக் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறேன்.’’

‘‘கன்னியாகுமரியின் மோசமான சாலைகளை வைத்து, ‘அந்தக் காலம்... அது அது அது வசந்த் அண்ட் கோ காலம்’ என்ற பாடலுடன் மீம்ஸ் வீடியோ வெளியானதைப் பார்த்தீர்களா?’’

‘‘பார்த்தேன். அந்தச் சாலைகள் கடந்த ஆட்சியில் போடப்பட்டவை. 2017–2018 நிதி ஆண்டிலேயே சாலைகளைச் சீரமைக்கும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அதன் பிறகு மீண்டும் ஒப்பந்தம் போடவேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியும் ஒரு பயனுமில்லை. இங்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். குமரி மாவட்ட மக்கள் ஓட்டுப் போடவில்லை என்கிற கோபத்தால் மத்திய பா.ஜ.க அரசு இந்த மாவட்டத்தைப் புறக்கணிக் கிறது. அதனால்தான் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளேன்.’’

‘‘போராட்டம் என்றால்... என்ன செய்யப்போகிறீர்கள்?”

‘‘மத்திய அரசு அதிகாரிகள், நாங்கள் சொல்லும் மக்கள் நலப் பணிகளைச் செய்ய பயப்படுகிறார்கள். இனிமேல், எந்தெந்த அதிகாரிகள் நாங்கள் சொன்ன பிறகும் மக்கள் நலப் பணிகளைச் செய்ய மறுக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிடுவேன். அப்படியும் அவர்கள் பணிகளைச் செய்யவில்லையென்றால், டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவேன்.’’

‘‘எம்.எல்.ஏ-வாக உங்களின் செயல்பாடுகள் மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதால்தான், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார் என்ற குற்றச்சாட்டு உங்கள்மீது வைக்கப்படுகிறதே?’’

‘‘தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எம்.ஏ-க்கள் பலரும் நாங்குநேரி தொகுதிக்குள் போய்ப் பார்த்துவிட்டு, என்னிடம் ‘நீங்க தொகுதியில நிறைய வேலை செஞ்சிருக்கீங்க. உங்க செயல்பாட்டை நாங்க பாராட்டுறோம். ஆனா, அதையும் தாண்டி எங்களுக்கு எப்படி ஜெயிக்க ணும்னு தெரியும்’ எனறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென் றால், ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டி யதை மூன்று ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டேன். அதிகார துஷ்பிர யோகம் செய்துதான் அ.தி.மு.க நாங்குநேரி யில் ஜெயித்திருக்கிறது.”

‘‘வசந்தகுமாரை எம்.பி ஆக்குவதற்காக தமிழக காங்கிரஸ் ஒரு எம்.எல்.ஏ-வை இழந்து விட்டது என்றும் பேசுகிறார்களே?”

‘‘கன்னியாகுமரி தொகுதியில் பலசாலி யான பொன்.ராதாகிருஷ்ணனைத் தோற்கடிக்க வசந்தகுமார் என்கிற வீரன்தான் தேவை என்று என்னைத் தேர்ந்தெடுத்தது கட்சித் தலைமை. கடந்த முறை போன்றே இந்த முறையும் கன்னியாகுமரியில் மோடி அலை வீசியது. ஆனால், நாங்கள் ராகுல் அலையைவைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே, காங்கிரஸுக்கு இழப்பு என்று சொல்ல முடியாது.’’

‘‘கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அதிகார மையம் நீங்கள் என்கிறார் களே?’’

‘‘கன்னியாகுமரியில் மேற்கு, கிழக்கு மாவட்டங்களுக்கு தனித்தனித் தலைவர் கள் இருக்கிறார்கள். ‘எல்லா நிகழ்ச்சி களுக்கும் என்னையும் கூப்பிடுங்கள்’ என்றுதான் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் சொல்லியிருக் கிறேன். மற்றபடி யார்மீதும் நான் அதிகாரம் செலுத்துவது கிடையாது. தவிர, தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வந்த பிறகு கோஷ்டி அரசியலை ஒழித்திருக்கிறார். எனவே அதிகார மையம், கோஷ்டி அரசியல் என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை.’’