Published:Updated:

``காங்கிரஸின் மறுபெயர் கரப்ஷன், கமிஷன், கேஸ்டிசம்!" - கர்நாடகாவில் ஜே.பி.நட்டா காட்டம்

ஜே.பி.நட்டா

கர்நாடகாவில் பா.ஜ.க-வினர், ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முக்கியத் தலைவர்கள் கர்நாடகாவை வட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

``காங்கிரஸின் மறுபெயர் கரப்ஷன், கமிஷன், கேஸ்டிசம்!" - கர்நாடகாவில் ஜே.பி.நட்டா காட்டம்

கர்நாடகாவில் பா.ஜ.க-வினர், ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முக்கியத் தலைவர்கள் கர்நாடகாவை வட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

Published:Updated:
ஜே.பி.நட்டா

கர்நாடகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்குள், சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆளும் பா.ஜ.க-வினரும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். பா.ஜ.க-வினர், ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முக்கியத் தலைவர்கள் கர்நாடகாவை வட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் வந்து, மாண்டியா மாவட்டம் மற்றும் பெங்களூர் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் பணியைத் தொடங்கினார்.

ஸ்ரீ சித்தகங்கா மடத்தில், நட்டா.
ஸ்ரீ சித்தகங்கா மடத்தில், நட்டா.

இந்த நிலையில், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக வந்திருக்கும் பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, இன்று மாலை, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்குச் சென்று, சித்தலிங்கா மஹாசுவாமியை சந்தித்ததுடன், 'சக்தி கேந்திரா' நிகழ்ச்சியில் பங்கேற்றார். பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.பி-க்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சித் தொண்டர்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சித் தொண்டர்கள்.

இதில் பேசிய ஜெ பி நட்டா, "பா.ஜ.க இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது. இதனால், இந்த 'ரிப்போர்ட் கார்டு' உடன் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தல் களத்தில் நாம் ஒவ்வொருவரும் பெருமையாக நெஞ்சில் தட்டிக்கொண்டு, இந்த ‘ரிப்போர்ட் கார்டு’ உடன் செல்வோம்.

பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களையும் சந்தித்து, நமது கட்சியின் பெருமை, மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி குறித்து தெரிவிக்க வேண்டும்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

கர்நாடக தேர்தலுக்காக நான் மாநிலம் முழுவதிலும் சுற்றுப்பயணம் சென்று, பிரசாரம் செய்து வாக்குச் சேகரிப்பேன். நாம் காங்கிரஸ் கட்சியினரை வீட்டிலேயே அமரவைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மறுபெயர், கரப்ஷன், கமிஷன், கேஸ்டிசம் என்பதுதான்’’ எனக் காட்டமாகக் கூறினார்.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில், சாதிகள்தோறும் பெரும் மடங்களும், மடாதிபதிகளும், தேர்தலை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றனர். இதனால், மடாதிபதிகளைச் சந்தித்து சாதிவாரியான வாக்கு வங்கியை தக்கவைக்க, பா.ஜ.க மாநில மற்றும் தேசியத் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.