தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி சற்று முன்பு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.69% சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன. மும்முனைப் போட்டியாக இருந்தாலும், பா.ஜ.க-காங்கிரஸ் இடையேயான மோதல்தான் பெருமளவில் பேசப்பட்டுவருகிறது.
வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், வரும் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால், அரசியல் அரங்கில் `கர்நாடகத் தேர்தல்' குறித்தான எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
Source - NDTV (National & Regional Channels)

Republic TV-P MARQ
பா.ஜ.க - 85-100 இடங்கள்
காங்கிரஸ் - 94-108 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24-32
பிற - 2-6 இடங்கள்
TV 9 Bharatvarsh - Polstrat
பா.ஜ.க - 88-98 இடங்கள்
காங்கிரஸ் - 99-109 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21-26 இடங்கள்
பிற - 0-4 இடங்கள்
Suvarna News - Jan Ki Baat
பா.ஜ.க - 94-117 இடங்கள்
காங்கிரஸ் - 91-106 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 14-24 இடங்கள்
பிற - 0-2 இடங்கள்
Zee News Matrize Agency
பா.ஜ.க - 79-94 இடங்கள்
காங்கிரஸ் - 103-118 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 25-33 இடங்கள்
பிற - 2-5 இடங்கள்
News Nation - CGS
பா.ஜ.க - 114 இடங்கள்
காங்கிரஸ் - 86 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 இடங்கள்
பிற - 3 இடங்கள்
ABP News - C Voter
பா.ஜ.க - 66-86 இடங்கள்
காங்கிரஸ் - 81-101 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20-27 இடங்கள்
பிற - 0-3 இடங்கள்
Source: Times Of India

Republic P-Marq
காங்கிரஸ் - 101 இடங்கள்
பா.ஜ.க - 93 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20 இடங்கள்
பிற - 4 இடங்கள்
Source: Times Now

M-atrize
காங்கிரஸ் - 108 இடங்கள்
பா.ஜ.க - 86 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 28 இடங்கள்
பிற - 2 இடங்கள்
P-MARQ
காங்கிரஸ் - 101 இடங்கள்
பா.ஜ.க - 92 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 28 இடங்கள்
பிற - 3 இடங்கள்
JAN KI BAAT
காங்கிரஸ் - 106 இடங்கள்
பா.ஜ.க - 99 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 19 இடங்கள்
பிற - 0 இடங்கள்
TV9-POLSTRAT
காங்கிரஸ் - 104 இடங்கள்
பா.ஜ.க - 93 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24 இடங்கள்
பிற - 3 இடங்கள்
CGS
காங்கிரஸ் - 86 இடங்கள்
பா.ஜ.க - 114 இடங்கள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 இடங்கள்
பிற - 3 இடங்கள்
Times Now - Poll Of Polls

பா.ஜ.க - 85 இடங்கள்
காங்கிரஸ் - 113
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 23 இடங்கள்
பிற - 3