Published:Updated:

கர்நாடகா: சிஷ்யனிடம் படுதோல்வியடைந்த பாஜக ஆளுமை சி.டி.ரவி;Heavy weight ரவியின் தோல்விக்குக் காரணம்?

சி.டி.ரவி

கர்நாடகாவில் பா.ஜ.க-வின் Stronghold-ஆக இருக்கு சி.டி.ரவி, தன்னுடைய சிஷ்யனிடம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது, பா.ஜ.க முகாமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கர்நாடகா: சிஷ்யனிடம் படுதோல்வியடைந்த பாஜக ஆளுமை சி.டி.ரவி;Heavy weight ரவியின் தோல்விக்குக் காரணம்?

கர்நாடகாவில் பா.ஜ.க-வின் Stronghold-ஆக இருக்கு சி.டி.ரவி, தன்னுடைய சிஷ்யனிடம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது, பா.ஜ.க முகாமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.டி.ரவி

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில், கர்நாடகா பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி, தனது சிஷ்யனிடம் படுதோல்வியடைந்தது, பா.ஜ.க மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் என்ன...

யார் இந்த சி.டி.ரவி?

கர்நாடகா மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தின் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சி.டி.ரவி (55), ஆரம்பக்காலம் முதலே பா.ஜ.க இளைஞர் அணி, சங் பரிவாரில் இருந்திருக்கிறார். படிப்படியாக கட்சியில் உயர்ந்த சி.டி.ரவி, 1999-ம் ஆண்டு சிக்மங்களூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சாகீர் அகமதை எதிர்த்துப் போட்டியிட்டு, 982 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

சி.டி.ரவி
சி.டி.ரவி

பிறகு, 2004-ம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, சாகீர் அகமதை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மாபெரும் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, நான்கு முறை சிக்மங்களூரில் களம் கண்டு வெற்றிபெற்ற சி.டி.ரவி, அந்தப் பகுதியில் பா.ஜ.க-வின் பெரும் ஆளுமையாக இருக்கிறார்.

இரு முறை அமைச்சர் பதவி, தமிழக தேர்தல் பொறுப்பாளர், தற்போது பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் என, பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்துவருகிறார். இது ஒரு புறமிருக்க, எதிரணிமீது ஊழல் புகாரை முன்வைப்பது, ‘சித்தராமையா இந்துக்களுக்கு எதிரானவர்’ என்று பிரசாரம் செய்வது, இந்துத்துவம் சார்ந்து சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவிப்பது... சி.டி.ரவியின் மற்றொரு முகமாகவே இருக்கிறது.

சி.டி.ரவி
சி.டி.ரவி

முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, பி.எல்.சந்தோஷுக்கு அடுத்தபடியாக, கர்நாடகா பா.ஜ.க-வின் ஆளுமையாக இருக்கும் சி.டி.ரவி, கர்நாடகத் தேர்தலில் இந்த முறை தனது சிஷியனிடமே படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

காங்கிரஸ் பலே வியூகம்!

சி.டி.ரவியின் பி.ஏ–வாகவும், பா.ஜ.க மாவட்ட பொறுப்பிலுமிருந்தவர் ஹெச்.டி.தம்மையா. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவர், ரவி - பா.ஜ.க-மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தார்.

தொகுதிக்குள் சி.டி.ரவியின் அளவுக்கு தம்மையா செல்வாக்கு வைத்திருந்ததால், வியூகம் அமைத்த காங்கிரஸ் தேர்தல் ‘வார் ரூம்’ மற்றும் மேலிட பொறுப்பாளர்கள், சி.டி.ரவிக்கு எதிராக தம்மையாவையே களமிறக்கினர்.

ஹெச்.டி.தம்மையா
ஹெச்.டி.தம்மையா

சி.டி.ரவியின் செல்வாக்குக்கு முன்பு தம்மையா படுதோல்வியைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பே நிலவியது. ஆனால், எஸ்டேட்டுகள், பழங்குடி மக்கள் மற்றும் ‘டூரிஸ்ட்’ பகுதிகள் அதிகமுள்ள இந்தத் தொகுதியில், காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. மேலும், தொகுதிக்குள் பல வியூகங்களை அமைத்து வாக்குச் சேகரிப்பு, மக்கள் பொதுக்கூட்டம், தம்மையாவை ஆதரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்கள் பிரசாரம் என மெனக்கெடப்பட்ட பல முயற்சிகள், தம்மையாவுக்கு பாசிட்டிவாக மாறியிருக்கின்றன. இதனால், தம்மையா மொத்தம், 85,054 ஓட்டுகள் பெற்று, 5,926 வாக்குகள் வித்தியாசத்தில், சி.டி.ரவியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்.

கர்நாடக பா.ஜ.க-வின் முகங்களில் ஒருவரான Heavy weight சி.டி.ரவி, தன்னுடைய சிஷ்யனிடம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது பா.ஜ.க முகாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.