Published:Updated:

அக்னிபத்: ``ஆர்.எஸ்.எஸ் மூலம் இந்தியாவில் நாஜிப்படை கொண்டுவர முயற்சி!" - ஹெச்.டி.குமாரசாமி சாடல்

குமாரசாமி

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அக்னிபத் திட்டம் தொடர்பாக பா.ஜ.க அரசை இன்று சாடியிருக்கின்றனர்.

அக்னிபத்: ``ஆர்.எஸ்.எஸ் மூலம் இந்தியாவில் நாஜிப்படை கொண்டுவர முயற்சி!" - ஹெச்.டி.குமாரசாமி சாடல்

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அக்னிபத் திட்டம் தொடர்பாக பா.ஜ.க அரசை இன்று சாடியிருக்கின்றனர்.

Published:Updated:
குமாரசாமி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த செவ்வாயன்று அறிமுகப்படுத்திய அக்னிபத் எனும் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்துவருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், ஒப்பந்த முறையில் நான்கு ஆண்டுக்காலம் இதில் பணியாற்றுவர். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவிகித வீரர்களும் நீக்கப்படுவர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பலவும், `மீதமுள்ள 75 சதவிகித வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்திவருகின்றன.

குமாரசாமி
குமாரசாமி

அந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்தத் திட்டம் தொடர்பாக பா.ஜ.க அரசை இன்று சாடியிருக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.டி.குமாரசாமி, ``10 லட்சம் அக்னி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது யார்... தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த 10 லட்சம் பேரில் ஆர்.எஸ்.எஸ் குழு இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிலிருந்து தக்கவைக்கப்படும் 2.5 லட்சம் பேரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களாக இருப்பார்கள். இதுவே ஆர்.எஸ்.எஸ்-ன் அஜண்டா. மேலும் வெளியேற்றப்படும் 75 சதவிகித வீரர்களால் நாடு முழுவதும் இது பரப்பப்படும். அதுமட்டுமல்லாமல் அந்த 75 சதவிகித வீரர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும். அது நாஜிகளைப்போலத்தான் இருக்கும். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் நாஜி இயக்கத்தைக் கொண்டுவர முயல்கிறார்கள். அதனால்தான் இந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும் மேற்கு வங்க சட்டசபையில் இன்று பேசிய மம்தா, ``இந்தத் திட்டத்தின் மூலம் பா.ஜ.க தனது சொந்த ஆயுதமேந்திய கேடர் தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுக்க விரும்புகிறது" என பா.ஜ.க-வைச் சாடினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism