Published:Updated:

"பாஜக-வின் 40% ஊழல் உலகுக்கே தெரியும் அமித் ஷா; அழிவு ஆரம்பமாகிவிட்டது!" – குமாரசாமி காட்டம்

குமாரசாமி

‘‘ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் பா.ஜ.க தனது ஏ.டி.எம் ஆகத்தான் பயன்படுத்தி வருகிறது." - குமாரசாமி

"பாஜக-வின் 40% ஊழல் உலகுக்கே தெரியும் அமித் ஷா; அழிவு ஆரம்பமாகிவிட்டது!" – குமாரசாமி காட்டம்

‘‘ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் பா.ஜ.க தனது ஏ.டி.எம் ஆகத்தான் பயன்படுத்தி வருகிறது." - குமாரசாமி

Published:Updated:
குமாரசாமி

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர, தற்போதே தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டன.

இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன், தேர்தல் பிரசாரத்துக்காக பெங்களூர் வந்திருந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தில், ‘‘2023 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக பரவலாக வதந்தி பரப்பி வருகின்றனர். வருகின்ற தேர்தலில் கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.க வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

செய்தியாளர்கள், கர்நாடகத்தில் மும்முனை போட்டி நிலவுவதாக கூறுவதை நான் மறுக்கிறேன். ஏனெனில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம். கர்நாடகம், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குடும்ப உறுப்பினர்களின் ஏ.டி.எம் ஆகத்தான் உள்ளது" என, பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய, முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி நிருபர்களிடம், ‘‘ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் பா.ஜ.க தனது ஏ.டி.எம் ஆகத்தான் பயன்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் அனைத்து பணிகளிலும், பா.ஜ.க 40% ஊழல் செய்வது உலகுக்கே தெரியும். இது உங்களுக்குத்தெரியாதா அமித் ஷா?

குமாரசாமி
குமாரசாமி

நான் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குகிறேன், நான் ஒன்றும் கூட்டணி கேட்டு பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வீட்டுக்கு செல்லவில்லையே? உங்கள் கட்சிக்காரர்கள்தான் எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து பேசி வருகின்றனர். இது கர்நாடகா, உங்களின் அரசியல் எல்லாம் இங்கு எடுபடாது. இங்கு பா.ஜ.க-வுக்கான அழிவு ஆரம்பமாகிவிட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தை, காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ என்கிறீர்கள், எங்களுக்கு ஓட்டுப்போட்டால் காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டதற்கு சமம் என்கிறீர்கள். இது எங்கள் கட்சி மீதான உங்களின் பயத்தை வெளிக்காட்டுகிறது" என கடுமையாக அமித் ஷாவை சாடினார்.

தேர்தல் நெருங்க நெருங்க, தலைவர்களின் வார்த்தைப்போர் வலுப்பெற்று, அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையை உருவாக்கியுள்ளது.