Published:Updated:

கர்நாடகா Vs மகாராஷ்டிரா: எல்லைப் பிரச்னையால் 144 தடை உத்தரவு; போலீஸ் குவிப்பால் பெல்காமில் பதற்றம்!

போலீஸார் குவிப்பு.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்து, `பெல்காமில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் உள்ளே வந்தால் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா Vs மகாராஷ்டிரா: எல்லைப் பிரச்னையால் 144 தடை உத்தரவு; போலீஸ் குவிப்பால் பெல்காமில் பதற்றம்!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்து, `பெல்காமில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் உள்ளே வந்தால் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என உத்தரவிட்டுள்ளார்.

Published:Updated:
போலீஸார் குவிப்பு.

கர்நாடக – மகாராஷ்டிரா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. கர்நாடகாவில் இருக்கும் `பெலகாவி’ எனப்படும் பெல்காம், பீதர், கார்வார் ஆகியவை மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் எல்லையோரத்திலுள்ள‌ 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என, மராத்திய அமைப்பினர் நீண்டகாலமாக‌க் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

பெலகவி வரைபடம்.
பெலகவி வரைபடம்.

அதேபோல், மகாராஷ்டிரா சங்கிலி மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களிலுள்ள, 53 கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக முடிவுறா தொடர்கதையாக இருக்கிறது.

இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது. பிரச்னை மீண்டும் வலுப்பெற்று, இரு மாநில எல்லையிலும் கடந்த ஒரு வாரமாக, அவ்வப்போது பஸ் கண்ணாடிகள் உடைப்பு, கன்னட மற்றும் மகாராஷ்டிர அமைப்பினரின் போராட்டம் எனப் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கைதுசெய்ய உத்தரவு!

மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பிரச்னை ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களான மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜா தேசாய் ஆகியோர் இன்று, பெல்காம் செல்வதாக அறிவித்திருந்தனர்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்து, `பெல்காமில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அமைச்சர்கள் வந்தால் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நித்தேஷ் பட்டிலும், அமைச்சர்கள் வருகைக்கு சட்டபூர்வமாக தடைவிதித்திருக்கிறார்.

கன்னட அமைப்பைப் சேர்ந்தவர்கள் பெல்காமில் குவிந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, இன்று காலை, பெல்காம் மாவட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நிலமை கட்டுக்குள் இருக்கிறது!

இது குறித்து பெல்காம் போலீஸ் ஐ.ஜி சதீஸ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம், ``பெல்காம் மாவட்டப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் தடையை மீறி கர்நாடகப் பகுதிக்குள் நுழைந்தால் உடனடியாக கைதுசெய்யப்படுவார்கள்.

தற்போது, அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெல்காம் நகரப்பகுதிக்குள் கன்னட அமைப்பினரும் குவிந்துள்ளனர். இவர்கள், பெல்காம் நகரப் பகுதியைவிட்டு மாநில எல்லைக்கு வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால், கன்னட அமைப்பினரையும் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, நிலமை கட்டுக்குள் உள்ளது’’ என்றார்.

போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

``வேறொரு நாளில் பார்வையிடுவோம்!”

இது குறித்து, மகாராஷ்டிரா அமைச்சர் சம்புராஜ் தேசாய் நிருபர்களிடம், ''பெல்காம் பகுதியைப் பார்வையிடச் செல்வதாக கர்நாடக அரசுக்கு, அரசு முறைப்படி முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால், நாங்கள் சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, கர்நாடக அரசு பெல்காம் செல்ல தடை விதித்திருக்கிறது. இதனால், நாங்கள் வேறொரு நாளில் பார்வையிட திட்டமிட்டிருக்கிறோம்; நாங்கள் தேதியை மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோமே தவிர பெல்காம் பகுதியைப் பார்வையிடும் திட்டத்தை ரத்துசெய்யவில்லை'' எனக் கூறினார்.

எல்லைப் பிரச்னை கர்நாடகா, மகாராஷ்டிராவில், பாஜக Vs பாஜக கூட்டணி (மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி) என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.