யார் வெல்வார்கள், யார் வீழ்வார்கள் என்பதை யூகிக்கமுடியாத அளவுக்குப் பரபரப்பும் திருப்பங்களுமாகத் தொடர்கிறது கர்நாடக அரசியல் நிலவரம். கடந்த ஆண்டு 224 தொகுதி சட்டமன்றத் தேர்தலின் மூலம் வாக்குச்சாவடியில் தொடங்கிய ஜனநாயகப் பயணம், இன்று சொகுதி விடுதிகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்துவிட்டு மும்பை சொகுசு விடுதியில் அடைக்கலமாகி யுள்ளனர். இப்படிப்பட்ட ‘பறக்கும் குணம்’ படைத்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கியது யார்? இன்று சொகுதி விடுதி முன்பு நின்று காவல் காக்கும் அதே கட்சித் தலைவர்கள்தானே!

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 105 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது பா.ஜ.க. ஆனால், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று 79 இடங்களை வென்ற காங்கிரஸ், 37 இடங்களை மட்டுமே வென்ற ம.ஜ.த கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது. அப்போதே இந்த ஆட்சி நீண்டகாலம் நிலைக்காது என்பது முடிவாகிவிட்டது. எதிரெதிர் கட்சியாகப் போட்டியிட்ட இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதே தார்மீகரீதியாக மக்களுக்குச் செய்யும் துரோகம். அதிலும், சட்டமன்றத் தேர்தலில் 18 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற்ற ம.ஜ.த கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இருந்தபோதும், இதுபோன்ற முரண்பாடு மிக்க கூட்டணிகள் அமைவதைத் தடுக்கவும் ஓட்டுகளின் மூலம் மக்கள் ஒதுக்கித் தள்ளிய ஒருவர் பின்வாசல் வழியாக முதல்வர் ஆவதைத் தடுக்கவும் அரசியல் சாசனத்தில் எந்த வழியும் இல்லை.

‘கட்சித் தாவல் தடைச் சட்டம், சட்டசபை விதிமுறைகள் ஆகியவற்றைத் தங்கள் வசதிக்கேற்ப தமிழக சபாநாயகர் பயன்படுத்திக்கொண்டார்; கட்சி மாறி வாக்களித்தவர்கள்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்பது குறித்தான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது கர்நாடக சபாநாயகர்மீதும் இதே போன்றதொரு குற்றச்சாட்டுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ‘ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில், எட்டு பேரின் கடிதம் முறையான வடிவத்தில் இல்லை. அதனால் ராஜினாமாவை ஏற்க இயலாது’ என்று கர்நாடக சபாநாயகர் ஒரே போடாகப்போட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கர்நாடக சட்டசபை விதிமுறையின் பிரிவு 202 (உட்பிரிவு 1-ன்)படி எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்வதற்குக் கொடுக்கப்பட வேண்டிய கடிதத்தில் இருக்கவேண்டிய வரிகள் இது மட்டும்தான்... “I hereby tender my resignation of my seat in the house with effect from” இந்த வடிவத்தில் எட்டு எம்.எல்.ஏ-க்கள் கடிதம் கொடுக்கவில்லையாம். நம்பும்படியாகவா இருக்கிறது?

ஒருவேளை ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணத்தை எட்டு பேரும் எழுதியிருந்தார்கள் என்ற காரணத்தை சபாநாயகர் முன்வைத்தாலும் அதுவும் எடுபடாது. ஏனெனில் கர்நாடக சட்டசபை விதிகளின்படி, காரணத்தை ராஜினாமா கடிதத்தில் எழுதக்கூடாது. ஒருவேளை அப்படி காரணத்தை எழுதியிருந்தால்கூட அதுகுறித்த விவரத்தைச் சட்டசபையில் படித்துக்காட்டக் கூடாது. இதற்காக ராஜினாமாவை ஏற்கமுடியாது என்று சொல்ல சபாநாயகருக்கு உரிமை இல்லை. மொத்தத்தில், ராஜினாமா விவகாரத்தை இழுத்தடித்து, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்த ஆளுங்கட்சி கூட்டணிக்கு அவகாசம் வேண்டும். அதற்கு சபாநாயகர் மறைமுகமாகத் துணைபோகிறார். ஜனநாயகத்துக்கு இது நல்லது இல்லை.

அதேசமயம் பா.ஜ.க-வின் ஜனநாயக அத்து மீறல்களை நியாயப்படுத்த முடியாது. காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை மும்பையில் பாதுகாப்பது பா.ஜ.க-தான் என்று பேசப்படுகிறது. பா.ஜ.க-வின் இந்தப் போக்கு கர்நாடகத்தில் மட்டுமல்ல... கோவா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்கிறது. கோவாவில் கட்சி மாறி பா.ஜ.க-வுக்கு வந்தவர்களுக்கு உடனடியாக மந்திரி பதவி வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில், ‘107 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வரவிருக்கிறார் கள்’ என மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகியும் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் வலதுகையாக இருந்தவருமான முகுல்ராய் அறிவிக்கிறார்.

வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு தங்களுக்கு நல்லாட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்த மக்களின் மனநிலையை இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா? சில மாதங்களுக்கு முன் கர்நாடக சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டே, “மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் கடும் வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானைவிட சில மாவட்டங்களில் வறட்சி அதிகமாக உள்ளது” என்றார். மாநிலமே வறட்சியில் இருக்க... தங்களை வளப்படுத்திக்கொண்டால் போதும் என்று அணிமாறுகிறார்கள் எம்.எல்.ஏ-க்கள். தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்ட எம்.எல்.ஏ-க்களைப் பதவி இறக்கத் தங்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லையே என்று மக்கள் புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

எமர்ஜென்சியை எதிர்த்து ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடித்த ‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணின் வழியைப் பின்பற்றி வந்த தேவ கவுடா, சித்தராமையா ஆகியோரின் கூட்டணி ஆட்சியில் இவ்வளவு ஜனநாயகப் படுகொலைகள் தொடர்வதுதான் இதில் மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்!