Published:Updated:

உச்ச நீதிமன்றத்தில் பின்வாங்கிய தேர்தல் ஆணையம்! - கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்

Election department of india
News
Election department of india ( Vikatan )

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் 17 பேரின் ராஜினாமா முடிவு, பெரும் புயலைக் கிளப்பியது. அவர்களைத் தகுதிநீக்கம் செய்து முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இந்தக் குழப்பங்களால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது. பெரும்பான்மை நிரூபிக்கத் தவறியதால் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.கவின் எடியூரப்பா முதல்வரானார்.

kumarasamy
kumarasamy

மேலும், ரமேஷ்குமார், `நடப்பு சட்டசபை காலாவதியாகும் வரை, மேற்கண்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் போட்டியிட முடியாது எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதற்கிடையே, கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 15-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த அறிவிப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் அல்லது தீர்ப்பு வரும் வரை தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் எனத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

supreme court
supreme court

அப்போது `இந்த வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?’ எனத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.