Published:Updated:

`97% மதிப்பெண் வாங்கியும் சீட் கிடைக்கலை, அதனால்தான்...' - உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை

உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை ( ட்விட்டர் )

97 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியும், தன் மகனால் இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியவில்லை என உக்ரைனில் பலியான கர்நாடக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹாவேரி பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். 21 வயதான நவீன் சேகரப்பா, கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவந்தார். நவீனின் மறைவுக்குப் பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்திய மாணவர் பலி
இந்திய மாணவர் பலி

நவீனின் தந்தை ஞானகவுத்ரா சேகரப்பா இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``என் மகன் 97 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியும், கர்நாடகாவில் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை. அப்படியே இடம் கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான், என் மகனை உக்ரைனுக்குப் படிக்க அனுப்பினேன். அங்கு இது போன்ற மருத்துவ படிப்புக்குக் குறைந்த அளவே செலவாகிறது. என் மகனின் உடலை இறுதிச் சடங்குகளுக்காகக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism