Published:Updated:

திருச்சி:`சூரப்பா விவகாரத்தில் மர்மங்கள் நிலவுகின்றன!'‍ - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்

`ரஜினி கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு வந்த பின்பு, அவர் கட்சி ஆரம்பித்த பின்பு அது குறித்துப் பேசலாம்’ - கார்த்தி சிதம்பரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஆரம்பத்தில் சூரப்பாவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு கருத்து வேறுபாடு காரணமாக அவர்மீது விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறது. தமிழக ஆளுநர் ஜனநாயகத்துக்குட்பட்டு செயல்படுவதில்லை. அவர் வரம்பு மீறிச் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு அழகல்ல" என்று விமர்சித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

எம்.பி கார்த்தி சிதம்பரம்
எம்.பி கார்த்தி சிதம்பரம்

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், ``2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 35 சதவிகித வாக்குகள்தான் பெற்றது. இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதன் காரணமாகக் குருட்டுத்தனமாக அவர்கள் நினைக்கும் சட்டத்தையெல்லாம் நிறைவேற்றுகிறார்கள். விவாதங்களை சடங்குக்காகவே நடத்துகின்றனர். அன் அடிப்படையில்தான் வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள்.

இந்தச் சட்டங்களால் பல பிரச்னைகள் ஏற்படவிருக்கின்றன. பெருமுதலாளிகளுக்காக இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானவை. அதனால் விவசாயிகள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நடத்தும் போராட்டம் உள்ளப்பூர்வமான போராட்டம். தாராளமயமாக்கல் கொள்கையைக் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான். விவசாயச் சந்தைகளை அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அப்போது தெரிவித்தோம்.

சூரப்பா
சூரப்பா

ஆனால் பா.ஜ.க அரசு அதைச் செய்யாமல் பல படிநிலைகளைத் தவிர்த்துவிட்டு தற்போதுள்ள சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், காங்கிரஸ் கொண்டுவந்தது குறித்துப் படிக்க வேண்டும். அவர் விவாதம் செய்ய விரும்பினால் காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

`சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூரப்பா விவகாரத்தில் பல மர்மங்கள் நிலவுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைத்தான் துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சூரப்பாவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக அவர்மீது விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறது. தமிழக ஆளுநர் ஜனநாயகத்துக்குட்பட்டு செயல்படுவதில்லை. அவர் வரம்பு மீறிச் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு அழகல்ல.

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

ரஜினி கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு வந்த பின்பு, அவர் கட்சி ஆரம்பித்த பின்பு அது குறித்துப் பேசலாம். கமல்ஹாசன் தமிழ்நாட்டு அரசியலில் கவனிக்கத்தக்க நபர் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது அ.தி.மு.க-வும், தி.மு.க கூட்டணியும்தான் முதன்மையானவை. கமல் போன்றோர் ஊடக வெளிச்சத்துக்காக இதைச் செய்கிறார்கள். அவர்கள் தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க அணியுடன் இணைய வேண்டும்.

ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்த ம.பி முதல்வர் முதல் அப்செட்டில் ரஜினி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கமல்ஹாசன் இதுவரை கூறிவந்த சித்தாந்தம் பா.ஜ.க-வுக்கு எதிரான சித்தாந்தம். அவர் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அரசியல் செய்கிறார். கமலின் மனசாட்சிப்படி அவர் அரசியல் இருக்க வேண்டுமென்றால் அவர் திரும்ப வேண்டிய இடம் காங்கிரஸ் கட்சி. ஆனால், காலச்சக்கரம் எப்படிச் சுழல்கிறது எனத் தெரியவில்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ரஜினி கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைக்கலாம், தனித்து நிற்கலாம். ஆனால், முதலில் அரசியலில் நிலைப்பாடு எடுக்க வேண்டும். அவர் நிலைப்பாட்டைப் பொறுத்தே எதையும் கூற முடியும். அவர் அறிவிப்பு திடீர் அறிவிப்பு. அந்த அறிவிப்புக்குப் பின்னால் சிலர் இருக்கிறார்கள். ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சி பா.ஜ.க-வின் கட்சி. அதை இயக்கப்போவதும் பா.ஜ.க-தான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு