Published:Updated:

`அரசுக்கு எதிராக எது நடந்தாலும் நாங்கள்தான் காரணமா?’ - கார்த்தி சிதம்பரம்

ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்தவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் ( என்.ஜி.மணிகண்டன் )

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராடும் டெல்லி, உ.பி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை பா.ஜ.க அரசு நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் வக்கிரமானது. இஸ்லாமியர்களை இரண்டாம் கட்ட பிரஜைகளாக மாற்றுவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
என்.ஜி.மணிகண்டன்

முரட்டுத்தனமாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னணியில் இந்தியாவிலேயே இருக்கும் 15 முதல் 20 சதவிகதம் வரை உள்ள இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முரட்டுத்தனமாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது.

ஹிட்லரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவர்தான். அவர் யூதர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கி கடைசியில் அழித்ததுபோல இஸ்லாமியர்களைப் படிப்படியாக இரண்டாம் கட்ட குடிமக்களாக்கி உள்நாட்டில் அகதிகளாக மாற்றி கடைசியில் அழிப்பதுதான் மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் திட்டம். இதை எதிர்த்துப் போராடும் மக்களுடன் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்'' என்றவரிடம்,

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
என்.ஜி.மணிகண்டன்

''குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்விக்கு, ''வெங்காயம் விலை கூடுவதற்கும் நாங்கள்தான் காரணம் என்று கூறினார்கள், அரசுக்கு எதிராக எது நடந்தாலும் எங்கள் மீது பழி போடுகிறார்கள்’' என்றார்.

''ப.சிதம்பரம் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். வழக்கிலிருந்து விடுதலையாகவில்லை, அவர் மீண்டும் சிறைக்குச் செல்வார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளாரே..?'' ''சுப்பிரமணியன் சுவாமி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது'' என்றார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
என்.ஜி.மணிகண்டன்

''உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?''

''ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்தவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எங்கள் கூட்டணிக் கட்சிகள் கண்டிப்பாக வெற்றி பெறும்'' என்றார்.