Published:Updated:

`12 அதிகாரிகளில் ஒருவரைக்கூட கைது செய்யாதது ஏன்?' - கார்த்தி சிதம்பரம் கேள்வி

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரம் கைது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையே என அவரின் மகனும் சிவகங்கை எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி-யுமான கார்த்தி ப.சிதம்பரம் தற்போது சிவகங்கை, காரைக்குடியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் கூறுகையில்,``மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவர்களின் தனிநபர் சுதந்திரத்தை சிதைத்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். சர்வாதிகார போக்கில்தான் பி.ஜே.பி அரசு செயல்படுகிறது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

என் தந்தை நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர். அவரது நற்பெயரை சிதைக்க வேண்டும், அரசுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வாதங்களை தடுப்பதற்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்தக் கைது என்பதைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

`காங்கிரஸ் வலுவாக இருக்கும்வரை தைரியமாக இருப்பேன்!’ - சோனியா சந்திப்புக்குப்பின் சிதம்பரம்

நீதித் துறையைப் பற்றி நான் எந்தக் கருத்தும் கூறவிரும்பவில்லை. அவர்கள் வழங்கும் தீர்ப்பு எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால், மேல்முறையீடு செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது நடைபெறுவது விசாரணைதான். கடந்த 2006-ம் ஆண்டு அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கிறது. அந்த முடிவை வைத்து ஒரு எப்.ஐ.ஆரை 2017-ம் ஆண்டு, 11 வருடங்கள் கழித்து போடுறாங்க. அந்த எப்.ஐ.ஆரைப் பதிவுசெய்து இரண்டரை வருடங்களாகிவிட்டன. அந்த இரண்டரை வருடங்களில் எனது வீடு மற்றும் அலுவலகங்களில் 4 முறை ரெய்டு பண்ணியிருக்கிறார்கள்; 25 முறை சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். அந்த வழக்கில் நானும் ஜாமீனில் வந்துவிட்டேன்.

குறிப்பிட்ட அந்தக் கோப்பில் 12 அதிகாரிகள் கையொப்பம் போட்ருக்காங்க. ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் நிதியமைச்சராக இருந்தவரை மட்டும், அவரை கொச்சைப்படுத்துவதற்காக விசாரணை என்ற பெயரிலேயே கைதுசெய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

நீதிமன்றத்தின் மூலமாக வீட்டுச் சாப்பாடு அளிக்கும் உத்தரவை நேற்று வாங்கினோம். அதற்கு அரசாங்கம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முன்னர் நாங்கள் இதே கோரிக்கையை முன்வைத்தபோது அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. சின்ன சின்ன சில்மிஷங்களும் நடந்தன. அதெல்லாம் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஒருவரின் குரலை நெறிப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது தவிர உண்மையான விசாரணை என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எல்லாரையும்விட அரசை ஆழமாக விமர்சித்தவர் சிதம்பரம்தான். அவர் மீதே நடவடிக்கை எடுக்கும்போது அரசை விமர்சிக்கும் மற்றவர்களுக்கு அச்சம் எழுவது இயல்புதான்.

ப.சிதம்பரம் கைது... அரசியலில் சகஜமா... பழிவாங்கலா?!
- என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

எல்லாருக்கும் தெரியும் கார் விற்பனை சரிஞ்சு போச்சு, உள்ளாடை விற்பனையும் சரிஞ்சு போச்சு. பொருளாதாரம் படிச்ச எல்லாருக்கும் தெரியும், ஒரு நாட்டில் உள்ளாடை விற்பனை குறைந்தால், அது பெரிய பொருளாதார வீழ்ச்சினுதான் அர்த்தம். ஏன்னா உள்ளாடை வாங்க வேணாம்னு எல்லாரும் தவிர்க்க ஆரம்பிக்குறாங்கனா, பொருளாதாரம் பயங்கரமான பாதிப்புக்குள்ளாயிருக்குனுதான் அர்த்தம். அதுக்கு இந்த அரசாங்கம் என்ன பண்ணுது? பட்ஜெட் ஒண்ணு போட்டாங்க. கம்பெனிகளின் வரியெல்லாம் குறைச்சாங்க. கம்பெனிகளுக்கு வரியை குறைப்பதினால், பொருளாதார வீழ்ச்சி மாறாது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
`சிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்!'- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்

கம்பெனிகளுக்கு முன்னாடி வரி 35% முதல் 40% வரை இருந்துச்சு, அதை 25%ஆக குறைத்திருக்கிறார்கள். அதனால கம்பெனிக்கு வருமானம் வந்தாலும், கம்பெனிகளுக்கு இருக்கும் கடனுக்கே சரியாகிவிடும். இதுவே தனிநபர்களின் வரிகளை குறைத்திருந்தால் அவர்கள் நிறைய பொருள்கள் வாங்குவார்கள். ஆனால், இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கையால் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பங்குச்சந்தையிலும் எந்த மாற்றமும் இல்லை. இது மேலோட்டமான முடிவே தவிர ஆக்கபூர்வமான முடிவு இல்லை.

பொதுமக்கள் உணர்வுகளைத் தேர்தல் மூலமாகவே காட்டுகிறார்கள். போராட அச்சம் கொள்கிறார்கள். பல தரப்பு மக்களுடன் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். அனைவரும் ப.சிதம்பரம் அவர்களின் கைது குறித்து வருத்தப்படுகிறார்கள்.

கீழடி பற்றி ஏற்கெனவே நாடாளுமன்றத்துல பேசியிருக்கேன், நான், சகோதரி கனிமொழி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிடோர் கலாசார துறை அமைச்சரைச் சந்தித்து ஒரு மனு கொடுத்து தொல்லியல் ஆய்வு மற்றும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்" என்றார்.

பின் செல்ல