Published:Updated:

`வைகோ சாந்தமாகிவிட்டார்; அவரைப் பற்றிப் பேசவில்லை!'- கலாய்த்த கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால், அதைக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டது மத்திய அரசு.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் ( சாய் தர்மராஜ் )

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் எம்.பி கார்த்திக் சிதம்பரம். அப்போது பேசியவர், ``நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து செயல்படுகிறது. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என நம்புகிறேன். மத்திய ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்களிடம் சிவகங்கையில் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகக் கோரிக்கை வைத்துள்ளேன்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

முழு மாநில அந்தஸ்துடைய காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியதை ஏற்க முடியாது. காஷ்மீரில் ஒரு கோடி மக்களின் நிலை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து தமிழக முதல்வர் பேசியது நாகரிகம்தானா என்று அ.தி.மு.க., நிர்வாகிகள்தான் மனசாட்சிப்படி சொல்லவேண்டும். வைகோ தற்போது சாந்தம் ஆகிவிட்டார். அதனால் நாங்களும் வைகோவைப் பற்றி எதுவும் பேசவில்லை. காவிரி, குண்டாறு திட்டத்துக்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

தமிழக அரசு 8 வருடமாக அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பி.ஜே.பி. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதால் தாங்கள் நினைத்த மசோதாவை நிறைவேற்றுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால், அதைக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டனர்' என்றார் ஆதங்கத்துடன்.