Published:Updated:

மதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க! -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்

சிலை திறப்புவிழா
சிலை திறப்புவிழா

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி சமாதி அமைக்க சட்டப் போராட்டம் நடத்தியதுபோல், மதுரையில் அவருக்கு சிலைவைக்கவும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கின்றனர் தி.மு.க-வினர்.

தமிழகத்திலயே பொது இடத்தில் அமைக்கப்பட்ட முதல் கருணாநிதி சிலையை, மதுரையில் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இது ஒரு சாதனை என்று தி.மு.க-வினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சிலைவைக்க மதுரை மாவட்ட தி.மு.க-வினர் பல இடங்களைத் தேர்வுசெய்து, மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லவில்லை.

சிலை திறப்புவிழாவில் மு.க.ஸ்டாலின்
சிலை திறப்புவிழாவில் மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில், சிம்மக்கல்லில் சிலைவைக்க அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக தமிழக அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசோ எந்த பதிலும் அளிக்காமல் இருந்துவந்தது. இந்தநிலையில், அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் கோ.தளபதி. அதைத் தொடர்ந்து, அவர்கள் கேட்ட சிம்மக்கல் ரவுண்டானாவிலேயே சிலைவைக்க அரசு அனுமதியளித்தது.

சிலை திறப்புவிழா
சிலை திறப்புவிழா

சென்னை மெரினாவில் கலைஞருக்குச் சமாதி அமைக்க சட்டப் போராட்டம் நடத்தியதுபோல், மதுரையில் அவருக்குச் சிலை வைக்கவும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கின்றனர் தி.மு.க-வினர். இந்தநிலையில், இன்று மாலை நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

கலைஞர் கருணாநிதிக்கு சிம்மக்கல்லில் சிலைவைத்தால் அங்கிருக்கும் வ.உ.சி-யின் சிலை முக்கியத்துவத்தை இழந்துவிடும். அதனால் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் காலையில் ஆர்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கலைஞர் சிலை
கலைஞர் சிலை

கலைஞர் கருணாநிதிக்கு மதுரையின் முக்கிய இடத்தில் சிலைவைக்கப்போவதாக அழகிரி தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் முன்பு அனுமதி கேட்கப்பட்டது. இதுவரை அதற்கான எந்த வேலையும் நடக்காத நிலையில், ஸ்டாலினைவைத்து சிலையைத் திறந்து பெயர் வாங்கிக்கொண்டது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க.

அடுத்த கட்டுரைக்கு