Published:Updated:

கருணாநிதி விரும்பியது என்றாவது ஒருநாள் நனவாகும்..! #MyVikatan

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

எதையும் சொல்வதோடு மட்டும் நிற்காது,செயலிலும் காட்டும் ஆற்றல் கொண்ட மு. கருணாநிதி, டெல்லியில் அறிவித்ததை செயல் வடிவம் காட்டும் வகையில், அதே ஆண்டு ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி சட்டமன்றத்தில் அரசாணை மூலம் அறிவித்தார். ..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு, மு.கருணாநிதி அவர்கள், தனது 44 ம் வயதில்,10 பிப்ரவரி 1969 அன்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். இவரது முதல் ஆட்சி காலத்திலே வரலாற்று சிறப்பு மிக்க மாநில சுயாட்சி குறித்த ஆய்வுக்கு நிபுணர் குழுவை அமைத்து அதற்கான தொடக்க புள்ளியை வைத்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின், 17 மார்ச் 1969 இல் டெல்லி சென்ற மு.கருணாநிதி, அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் முழக்கமான மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி என்ற கொள்கையின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான முதல் படியாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை பற்றி ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

கருணாநிதி
கருணாநிதி

எதையும் சொல்வதோடு மட்டும் நிற்காது,செயலிலும் காட்டும் ஆற்றல் கொண்ட மு. கருணாநிதி, டெல்லியில் அறிவித்ததை செயல் வடிவம் காட்டும் வகையில், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் நாள் ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி சட்டமன்றத்தில் அரசாணை மூலம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில், முன்னாள் சென்னை பல்கலைகழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி சந்திரா ரெட்டி ஆகிய மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார்.

இந்த குழுவின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து மாநில சுயாட்சியின் உயிர் நாடியான சட்டமன்றம், நிர்வாகம், நிதி பங்கீடு மற்றும் அதன் கீழ் இயங்கும் நீதித்துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பது. இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு இரண்டாண்டுக்குள், மே 27,1971 அன்று ராஜமன்னார் கமிட்டி தனது 21 அத்தியாயங்களை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் குறிப்பிடத்தக்க அத்தியாயங்கள் கூட்டாட்சி தத்துவம், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம், மொழி, மாநிலத்தின் எல்லைகள் போன்றவைகளாகும். மேலும், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இது அகில இந்திய அளவில் மாநில சுயாட்சி குறித்த ஒரு கூர்மையான பார்வையை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகே இது தொடர்பான பல அறிக்கைகள் வெளிவர தொடங்கின. அவைகளில் குறிப்பிட தக்க சில அறிக்கைகள், டிசம்பர் 1977 ல் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவந்த ஒரு குறிப்பாணை (மெமோரண்டம்). இதனை தொடர்ந்து,1988 ம் ஆண்டில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் ஒன்றிய ,மாநில அரசிற்கிடையேயான உறவுகள் மற்றும் அதிகார பகிர்வுகள் குறித்து ஆய்வு செய்து தனது அறிக்கையை சம்மர்ப்பித்தது. அதன் பிறகு, ஏப்ரல் 2007 இல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட புஞ்சி கமிசனும் இதே விசயத்திற்கான தனது அறிக்கை தாக்கல் செய்தது.

அமெரிக்கா அசத்துறாங்க... நாம?- தடுப்பூசி அனுபவம் பகிரும் அமெரிக்க வாழ் இந்தியர் #MyVikatan

ராஜமன்னார் கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளாக மாநிலங்களுக்கிடையே ஆன கவுன்சிலை அமைப்பது, மாநில சட்டமன்றகள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த கூடிய அரசியலமைப்பு பிரிவுகள் 356 மற்றும் 357 ஆகியவைகளை நீக்குவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் 246, ஏழாவது அட்டவணையில் உள்ள ஒன்றிய பட்டியல், பொது (கன்கரண்ட்) பட்டியலில் உள்ள சில துறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, அகில இந்திய ஆட்சி பணிகளான ஐ.ஏ.ஸ் மற்றும் ஐ.பி.ஸ் போன்றவைகளை நீக்குவது.

கருணாநிதி
கருணாநிதி

16 ஏப்ரல் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ராஜமன்னார் குழுவின் அறிக்கை தொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதன் பின், இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு , இறுதியாக 20 ஏப்ரல் 1974 இல் மு.கருணாநிதி அவர்களின் பதிலுரையை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ராஜமன்னார் கமிட்டியின் பரிந்துரைகள் ஒன்றிய அரசால் ஏற்கப்படாவிட்டாலும், அகில இந்திய அளவில் மாநில சுயாட்சி குறித்த ஒரு விவாதத்தை உருவாக்கியது, அதன் பெருமை இந்த கமிட்டியை அமைத்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களையே சாரும்.

17 பிப்ரவரி 2010 தான் கடைசியாக முதல்வராக இருந்த காலத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் மாநில சுயாட்சி குறித்து "பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவும் மற்றும் மாநிலங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே ஒன்றியமும் வலுவாக இருக்கும் என்பதால் திமுக மாநில சுயாட்சியை தொடர்ந்து எழுப்பி கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் மாநில சுயாட்சி கனவு நனவாகும்." என்று மு.கருணாநிதி அவர்கள் கூறியிருந்தார்.

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு