Published:Updated:

"ஆறு டீ கொண்டுவா... ஆனா, ஆறாம கொண்டுவா!" - கருணாநிதி நினைவுதின சிறப்புப் பகிர்வு

கருணாநிதி

ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு அனைத்துத் துறையைச் சார்ந்தவர்களும் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தியது அநேகமாக கருணாநிதி ஒருவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.

"ஆறு டீ கொண்டுவா... ஆனா, ஆறாம கொண்டுவா!" - கருணாநிதி நினைவுதின சிறப்புப் பகிர்வு

ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு அனைத்துத் துறையைச் சார்ந்தவர்களும் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தியது அநேகமாக கருணாநிதி ஒருவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.

Published:Updated:
கருணாநிதி

திருக்குவளையில் முதல் வரியைத் தொடங்கி, சென்னை மெரினா கடற்கரையில் கடைசி வரியை முடித்து காலம் எழுதிய நெடுங்கவிதை 'கருணாநிதி!' என்று சொன்னால் மிகையாகாது.

தமிழினத் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைந்து, இன்றுடன் ஓராண்டு ஓடிவிட்டது. அவர் நினைவிடத்தில் இன்றுவரை மக்கள் கூட்டம் தினமும் வந்து செல்கிறது. தி.மு.க-வினரும் கருணாநிதியின்பால் பற்றுக்கொண்டவர்களும் பொதுமக்களும் அவர் நினைவிடத்துக்குச் சென்று கண்டுவருகின்றனர்.

கருணாநிதி
கருணாநிதி

அவர் மறைந்த பிறகு, ஏறத்தாழ அனைத்துத் துறையினரும் பங்கேற்ற தனித்தனி நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு அனைத்துத் துறையைச் சார்ந்தவர்களும் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தியது அநேகமாக கருணாநிதி ஒருவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கருணாநிதி, தாம் இருந்தவரையில் எல்லாத் துறையினருடனும் தன் தொடர்பைத் தொடர்ந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் தன் கால்தடத்தைப் பதித்துச் சென்றிருக்கிறார் என்பதும்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணாநிதி பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் என்பது அகிலமறிந்தது. அதிலும் குறிப்பாக, பேச்சுத் திறமையில் அவர்போல் இனி எவர் வருவார் என வியக்கும்வகையில் இருக்கும், அவரின் வாதத் திறமைகள். கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார், கருணாநிதி.

1991-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட நாள் அன்று, 'காலை முதலே ஆட்சி கலைக்கப்படும்' எனச் செய்திகள் டெல்லியிலிருந்து வந்துகொண்டிருந்தன. ஆனால், 'குடியரசுத் தலைவர் இன்னும் கையெழுத்துப் போடவில்லை' என்ற தகவலும் வந்தது. பின்னர் அன்று இரவு, குடியரசுத் தலைவர் ஆட்சிக் கலைப்பு உத்தரவில் கையெழுத்துப் போட்டுவிட்டார் என்ற தகவல் நரம்பியல் நிபுணரும் கருணாநிதியின் நண்பருமான டாக்டர் பி.ராமமூர்த்திக்குத் தெரியவந்தது.

கருணாநிதி
கருணாநிதி

உடனே கோபாலபுரம் சென்ற டாக்டர் ராமமூர்த்தி, அங்கு கருணாநிதி இல்லாததால் அவர் வருகைக்காகக் காத்திருந்தார். சற்றுநேரத்தில், கருணாநிதி உள்ளே வருகிறார். அப்போது டாக்டர் ராமமூர்த்தி, "கடைசியா குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போட்டுட்டாருபோல இருக்கு" என்றார். அந்தச் சூழ்நிலையிலும் நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்த கருணாநிதி, "பின்ன என்ன முதல்லயா போடுவாங்க, கடைசியிலதானே (ஆட்சிக் கலைப்பு உத்தரவு தாளில்) கையெழுத்துப் போடுவாங்க'' என்றாராம். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வியந்துபோனார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. தி.மு.க இரண்டே தொகுதிகளில் வென்றது. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள், தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் ஆறு பேர் கோபாலபுரத்துக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தனர்.

கருணாநிதி
கருணாநிதி

அப்போது அவர், வந்தவர்களிடம் 'காபி வேணுமா... டீ வேணுமா' என்று கேட்டுவிட்டு, தன் உதவியாளர் செயல்மணியை அழைத்து, "ஆறு டீ கொண்டுவா... ஆனா, ஆறாம கொண்டுவா'' என்றாராம். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்துவிட்டனர். இறுகிய சூழ்நிலையையும் தன் நகைச்சுவையால் மாற்றிக்கொள்ளும் திறன்பெற்றவர் கருணாநிதி என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகிறது.

2000-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கடத்திச் சென்று பினையாக வைத்திருந்துபோது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை நோக்கி, "முதலமைச்சர், வீரப்பனுக்கு வேண்டியவர்' என்று குற்றம்சாட்டிப் பேசினார்.

அதற்கு உடனே ஆளுங்கட்சி உறுப்பினர்கள், "என்ன ஆதாரம் இருக்கிறது" என்று கேட்டுக் கூச்சலிடுகின்றனர். அவர்களையெல்லாம் அமைதிப்படுத்திவிட்டு கருணாநிதி சொன்னார், "ஆமாம்... நான் வேண்டியவன்தான். 'கடத்தியவர்களையெல்லாம் விட்டுவிடு. நீயாக வந்து சரணடைந்துவிடு' என்று வீரப்பனை வேண்டியவன்தான்'' என்று பதில் சொன்னார். அவருடைய பதிலைக் கேட்டதும் அனைவரும் வாயடைத்துப்போயினர்.

கருணாநிதி
கருணாநிதி

இப்படி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்த்தரப்பினரின் வாதங்களை ஆணித்தரமாகவும் அதேவேளையில் நயமாகவும் நகைச்சுவையாகவும் எதிர்கொண்ட கருணாநிதியின் உயிரை, காலன் பறித்துச்சென்று இன்றுடன் ஒரு வருடம் கடந்தாலும், அவருடைய நகைச்சுவை உணர்வும் தமிழுக்காற்றிய தொண்டும் என்றும் மக்கள் மனங்களில் இருந்துகொண்டே இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism