Published:Updated:

``பாஜக-வில் சேர்ந்து, அண்ணாமலையின் பதவியைக்கூடக் கைப்பற்றுவார் செந்தில் பாலாஜி" - கரூர் சின்னசாமி

பேட்டியளிக்கும் கரூர் சின்னசாமி

``அமைச்சர் செந்தில் பாலாஜி தானாகப் பதவி விலகுவது நல்லது. இல்லையென்றால், அவருக்கு எதிராக அ.தி.மு.க தலைமையிடம் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.'' - கரூர் சின்னசாமி

Published:Updated:

``பாஜக-வில் சேர்ந்து, அண்ணாமலையின் பதவியைக்கூடக் கைப்பற்றுவார் செந்தில் பாலாஜி" - கரூர் சின்னசாமி

``அமைச்சர் செந்தில் பாலாஜி தானாகப் பதவி விலகுவது நல்லது. இல்லையென்றால், அவருக்கு எதிராக அ.தி.மு.க தலைமையிடம் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.'' - கரூர் சின்னசாமி

பேட்டியளிக்கும் கரூர் சின்னசாமி

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "செந்தில் பாலாஜி 2011 - 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடி செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, `முழுமையாக வழக்கை விசாரணை செய்து வழக்கு நடத்த வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அது இப்போதைக்குச் சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், கேபினட் பொறுப்பிலுள்ள ஓர் அமைச்சரை நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்திருப்பதால், முதலமைச்சர் என்ற அடிப்படையில் தன்னுடைய அமைச்சரவையிலுள்ள ஒருவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

பேட்டியளிக்கும் கரூர் சின்னசாமி
பேட்டியளிக்கும் கரூர் சின்னசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளான அமைச்சர்கள் துரைமுருகன், நேரு ஆகியோரைக்கூட நீக்க முடியும். ஆனால், செந்தில் பாலாஜியை நீக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருகிறார். முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி தொடங்கி, மருமகன் சபரீசன் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமான நபராக இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி தானாகப் பதவி விலகுவது நல்லது. இல்லையென்றால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அ.தி.மு.க தலைமையிடம் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.

ஏற்கெனவே, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, ஆந்திராவிலுள்ள அதிகாரியை நேரில் சந்தித்துச் சரிக்கட்டியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதனால்தான், 'விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியைப் பொறுத்தமட்டில், குறுக்கு வழியில் பல்வேறு கட்சிக்குள் நுழைந்து அதிகாரமுள்ள பதவிகளைக் கைப்பற்றிவருகிறார்.

``பாஜக-வில் சேர்ந்து, அண்ணாமலையின் பதவியைக்கூடக் கைப்பற்றுவார் செந்தில் பாலாஜி" - கரூர் சின்னசாமி

இனி, டெல்லியில் சென்று அமித் ஷாவைச் சந்தித்து இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வர, பா.ஜ.க-வில் இணைந்து, தமிழகத்தின் மாநிலத் தலைவரான அண்ணாமலையை காலி செய்துவிட்டு, செந்தில் பாலாஜி அமர்ந்துகொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்கும்படி செந்தில் பாலாஜி கேட்டாலும் கேட்பார்.

இதுவரை, நான் செந்தில் பாலாஜியை மேடையில்கூட விமர்சித்தது கிடையாது. இன்று நீதிமன்றமே தலையிட்டு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதால், நான் இது குறித்து வலியுறுத்த வேண்டிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறேன். ஓரிரு மாதங்களில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாமல் போகப் போவதைப்போல, ஓ.பி.எஸ்-ஸும் செல்லாக்காசாகிப் போவார்" என்றார்.