Published:Updated:

கரூர்: தெருவுக்கு `உதயநிதி' பெயர்... முன்மொழிந்த திமுக கவுன்சிலர் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?

கரூர் மாநகராட்சி - மேயர்

`` 'மணக்களம் தெரு' என்பதை மாற்றி, 'உதயநிதி முதலாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு' என்று பெயரை மாற்ற வேண்டும்" என்று 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

கரூர்: தெருவுக்கு `உதயநிதி' பெயர்... முன்மொழிந்த திமுக கவுன்சிலர் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?

`` 'மணக்களம் தெரு' என்பதை மாற்றி, 'உதயநிதி முதலாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு' என்று பெயரை மாற்ற வேண்டும்" என்று 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
கரூர் மாநகராட்சி - மேயர்

கரூர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 36-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக வசுமதி என்பவர் இருந்து வருகிறார். இந்த வார்டுக்குள் 'மணக்களம் தெரு' என்ற பெயரில் மூன்று தெருக்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ``இந்த 'மணக்களம் தெரு' என்பதை மாற்றி, 'உதயநிதி முதலாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு' என்று பெயரை மாற்ற வேண்டும்" என்று 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், மாமன்றத்தில் அந்த தீர்மானம் பாஸ் ஆனதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது சர்ச்சையாக... கடைசி நேரத்தில், ``தீர்மானம் நிறைவேற்றபடவில்லை. அதை வாபஸ் வாங்கிவிட்டோம்" என்று மேயர் கவிதா கணேசன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி

'என்ன பஞ்சாயத்து?' என்று இதன் உள்விவகாரங்களை அறிந்த சிலரிடம் விசாரித்தோம்.

``36-வது வார்டு தி.மு.க கவுன்சிலரான வசுமதியின் கணவர் பிரபு, கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். இந்த வார்டில் உள்ள பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்த நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதால், அதை சிறப்பிக்கும் வகையில், மணக்களம் தெருவை, 'உதயநிதி தெரு' என்று மாற்ற தன்னுடைய மனைவி மூலம் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, உதயநிதி மனதில் இடம்பிடிக்க நினைத்தார். மேயரும் இதில் ஆர்வமாக தீர்மானம் நிறைவேற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் சர்ச்சையானதும், கடைசி நேரத்தில், 'வெறும் கோரிக்கை மட்டுமே வைத்தாங்க. நாங்க தீர்மானமா அதை நிறைவேற்றலை'னு இப்போ மேயர் மழுப்புறாங்க. தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், அடுத்த கூட்டத்தில் அதை வசுமதி வாபஸ் வாங்கிருவார்" என்றார்கள்.

இது குறித்து, வசுமதியின் கணவர் பிரபுவிடம் பேசினோம். ``இரண்டு நாளுக்கு முன்னாடியே, மணக்களம் தெருவுக்கு உதயநிதி பெயரை வைக்க என் மனைவி மாமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், கட்சித் தலைமை, 'உயிரோடிருப்பவர்கள் பெயரை தெருக்களுக்கு வைக்கக் கூடாது'னு சொல்லிட்டு. அதனால், அதை தீர்மானமா நிறைவேற்றல. மத்தபடி, இதை சர்ச்சையாக்க ஒரு விஷயமும் இல்லை" என்றார்.

கவிதா கணேசன் (கரூர் மாநகராட்சி மேயர்)
கவிதா கணேசன் (கரூர் மாநகராட்சி மேயர்)

இறுதியாக, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசனிடம் பேசினோம். "உதயநிதி பெயரை அந்த தெருவுக்கு வைக்க வேண்டும் என்ற 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதியின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றவில்லை" என்றார்.