Published:Updated:

``ஆளும் பா.ஜ.க அதை மறந்து விட்டது" - பட்ஜெட் குறித்து விளாசும் ஜோதிமணி!

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

`அனைவருக்கும் அனைத்து மொழிகளும் கற்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது' என்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

"மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. அதேபோல், அனைவருக்கும் அனைத்து மொழிகளும் கற்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நன்றி அறிவிக்கும் ஜோதிமணி
நன்றி அறிவிக்கும் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அமோகமாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் தொடர்ந்து நன்றி அறிவிப்பு செலுத்தி வருகிறார். இந்நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டி, தான்தோன்றிமலை, கொளந்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் ஆலயங்களில் இறை வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேட்டி அளிக்கும்போது அவர் கூறியதாவது, "நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. மக்கள்தொகையின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 3,000 கோடி நிதியைக் குறைத்துள்ளது. தமிழக அரசு தங்களுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தமிழக மக்களை அடகு வைத்துள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. என்ன வரவு, என்ன செலவு என்று தெரியப்படுத்திய பின்னர், நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறுகுறு நடுத்தர விவசாயம், உள்கட்டமைப்பு இவைகளுக்கெல்லாம் எவ்வாறு, எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவுப்படுத்த வேண்டும்.

நன்றி அறிவிக்கும் ஜோதிமணி
நன்றி அறிவிக்கும் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

அதைப்பொறுத்துதான், எதுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது முடிவு செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இதைக் கணக்கிட்டு புதிய பட்ஜெட்டில் போடுவார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அதை மறந்து விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு பெயரளவில் மட்டுமே மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது அதேபோல், தமிழகத்தில் கல்வி சார்ந்த அனைத்தையும், மற்ற துறைகளையும் மத்திய அரசு நசுக்கி வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்பை எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். எந்த மொழியையும் முறையாகக் கற்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதுகுறித்து, மத்திய அமைச்சரிடம் கேட்டபோது, 'இந்தியைத் திணிக்க மாட்டோம்' என்று உறுதிமொழி அளிக்க மறுத்துவிட்டார்கள்" என்றார் அதிரடியாக!.

`தொடர் வாசிப்பின் வழி நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து!’ - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா #LetsRelieveStress